இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. 50எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. வருகிறது புது OnePlus போன்.. எந்த மாடல்?
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) என்ற ஸ்மார்ட்போனை மாடலையும் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். அதாவது இந்த போன் வரும் மார்ச் (March) மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பிறகு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் ரியர் கேமரா, OLED டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இது சாம்சங் எஸ்25 சீரிஸ் போன்களுக்கு மிகப்பெரிய போட்டியாக அமையும். குறிப்பாக ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
6.31-இன்ச் எல்டிஒபி ஒஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவு இந்த ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.
50எம்பி பிரைமரி கேமரா + 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் (50MP telephoto lens) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

5500mAh பேட்டரி அல்லது 6000 பேட்டரிmAh உடன் இந்த ஒன்பிளஸ் 13 மினி வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளன. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
அதேபோல் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications