Home
Mobile

வெயிட்டிங்லயே வெறி ஆகுது.. OnePlus 13-ன் 2 முக்கிய அம்சங்கள் உறுதி.. கிளாஸ்-ஆ இருக்கு.. சும்மா மாஸ்-ஆ இருக்கு!

ஒன்பிளஸ் 13 (OnePlus 13) இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் (அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட அம்சங்கள் மற்றும் ஆன்லைன் லீக்ஸ்) தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள ஒரு அம்சங்கள் (ஒரு அம்சம் மற்றும் கேஸ் தொடர்பான ஒரு அப்டேட்) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உலகின் கவனத்தை ஈர்க்கும்படி உள்ளது. அது என்னது? ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இது என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

சீனாவின் சமூக ஊடக தளமான வெய்போவில், ஆரம்பகால ஒன்பிளஸ் போன்களில் மிகவும் பிரபலமான பேம்பு கேஸ்கள் ஆனது ஒன்பிளஸ் 13 உடன் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த ரசிகரின் கேள்விக்கு ஒன்பிளஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தற்போதைக்கு சிஎம்எப் நிறுவனத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்பதால் வுட்டன் கேஸ்கள் (Wooden Cases) திரும்புவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை.

வெயிட்டிங்லயே வெறி ஆகுது.. OnePlus 13-ன் 2 முக்கிய அம்சங்கள் உறுதி!

ஆனால் அவர் ஒன்பிளஸ் 13-க்கான வுட் க்ரெயின் கேஸ்கள் "மிகவும் நன்றாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். மிகவும் சுவாரஸ்யமாக இது "மேக்னடிக் சக்ஷன் பங்க்ஷன் உடன் வரும் என்பதையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். இதன்மூலம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்பதை வெளிப்டையாகவிபே புரிந்துகொள்ள முடிகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சிஸ்டர் பிராண்ட் ஆன ஒப்போ, அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஆன ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸில் கூட மேக்னட்டிக் சார்ஜிங் ஆதரவை சேர்க்கவுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து ஒப்போ நிறுவனம் பவர் பேங்க் உட்பட பலவிதமான மேக்னடிக் அக்ஸசெரீஸ்களையும் தயாரித்து வருகிறது.

ஆகமொத்தம், ஒன்பிளஸ் 13 பயனர்களுக்கு சார்ஜிங் செய்வதற்கான விருப்பங்கள் விரிவுபடுத்தப்பட உள்ளது. சார்ஜ் செய்வதற்கு அப்பால், கார் மவுண்ட்கள் மற்றும் வாலட் கேஸ்கள் போன்ற பிற பாகங்களுக்கும் கூட மேக்னடிக் சிஸ்டம் தேவைப்படுகிறது இது மேக்சேஃப் (MagSafe) உடன் ஆப்பிள் நிறுவனம் செய்ததை போன்ற ஒரு ஒருங்கிணைந்த பயனர் அனுபவத்தை வழங்குவதற்கான ஒரு அற்புதமான வழியாக இருக்கும்.

முன்னதாக நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ரார் (@heyitsyogesh), ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி பேக் செய்யப்படும். இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் உள்ள 5400எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்பிடும் போது "மிகப்பெரிய" அப்கிரேட் ஆக இருக்கும் என்கிற தகவலை வெளிப்படுத்தி இருந்தார்.

இருப்பினும் ஒன்பிளஸ் 13 ஆனது ஒன்பிளஸ் 12 மாடலில் உள்ளதை போலவே "அதே" 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை தன கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஆனது லேட்டஸ்ட் ஜெனரேஷன் ஃபிளாக்ஷிப் சிப் கொண்டு இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4) ஆக இருக்கலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது பிஓஇ எக்ஸ்2 (BOE X2) டிஸ்பிளேவுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic Fingerprint Sensor) சேர்க்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன்வரலாம். அதில் சோனி LYT-808 சென்சார் மற்றும் எப்/1.6 அபெக்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கும். இதன் கேமரா செட்டப்பில் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் பேக் செய்யப்படலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, பெரும்பாலும் இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலைக்கே அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த 2024 ஜனவரி மாதம் ரூ.64,999 என்கிற ஆரம்ப விலைக்கு அறிமுகமானது. ஆக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.65,000 - ரூ.70,000 க்குள் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 Magnetic Wireless Charging Support Confirmed All You Need To Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X