OnePlus 13 நினைச்சத விட ரொம்ப சீக்கிரமா அறிமுகமாகும்.. எப்போது? என்னென்ன அம்சங்கள்? என்ன விலை?
OnePlus 13 Launch Timeline: ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது அதன் முன்னோடியை விட மிகவும் முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சீன மைக்ரோ பிளாக்கிங் இணையதளமான வெய்போவில் உள்ள நம்பகமான டிப்ஸ்டர் ஒருவரின் கூற்றுப்படி ஒன்பிளஸ் 13 மாடலானது நாம் நினைத்ததை விட மிகவும் சீக்கிரமாக அறிமுகமாகும். அது எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின் படி.. சீனாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அறிமுகமானது "அக்டோபர் இறுதியில் இருந்து நவம்பர் தொடக்கத்திற்குள்" நடக்கும்படி திட்டமிடப்பட்டு உள்ளது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது நவம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டால், அது சீனாவில் "டபுள் 11" தினத்தன்று விற்பனைக்கு வரக்கூடும். இது சீனாவில் சிங்கிள்ஸ் டே என்று மிகவும் பிரபலமாக அறியப்படும், சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் ஷாப்பிங் திருவிழாவாகும், இது நவம்பர் 11 அன்று நடைபெறுகிறது. ஆக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது இதற்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
சீன அறிமுகம் விரைவாக நடந்தால், ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் இந்தியா மற்றும் உலகளாவிய அறிமுகமாகும் கூட சற்றே முன்பாக நடக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த இடத்தில் - நவம்பர் மாத சீன அறிமுகமும் கூட நடக்காமலேயே போகலாம். ஏனென்றால் நமக்கு கிடைத்தவை எல்லாமே லீக்ஸ் தகவல்கள் தான்.
இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் இது ரூ.65,000-க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மாட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகமானது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் பேக் செய்யப்படலாம்? இதுவரை வெளியான லீக்ஸ் தகவல்களின்படி ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது கர்வ்டு எட்ஜ்கள் (Curved Edges), 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உடனான 2கே பிளாட் டிஸ்பிளேவை (2K Flat Display) கொண்டிருக்கலாம். ப்ராசஸரை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4 chipset) மூலம் இயக்கப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஆனது எப்/1.6 அபெக்ஷர் உடனான 50-மெகாபிக்சல் சோனி எல்ஒய்டிT-808 கேமரா சென்சாரை (Sony LYT-808 camera sensor) பேக் செய்யலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் O916T ஹாப்டிக் மோட்டாருடன் (O916T haptic motor) வரும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன் வந்த லீக்ஸ் தகவல்கள், ஒன்பிளஸ் 13-ன் கேமரா செட்டப்பில், ப்ரைமரி சென்சார் உடன் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 50 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் இருக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன!
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இதில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங் (IP69 Rating) இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் (ultrasonic fingerprint scanner) பெறலாம்!


Click it and Unblock the Notifications