Home
Mobile

இப்படி ஒரு போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்.. 50MP கேமரா.. Snapdragon 8 ஜென் 4.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

ஒன்பிளஸ் நிறுவனம் எப்போதுமே தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ஒவ்வொரு போன்களுக்கு இந்திய சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 13 (OnePlus 13) போனை அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது வரும் அக்டோபர் (October) மாதம் இறுதியில் அல்லது நவம்பர் (November) துவக்கத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் சீனாவில் வெளியான சில வாரங்களில் இந்தியாவிலும் இந்த ஒன்பிளஸ் 13 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்..  50MP கேமரா.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 Specifications): ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 6.7-இன்ச் மைக்ரோ- கர்வ்டு டிஸ்பிளே ( micro-curved display) உடன் இந்த ஒன்பிளஸ் 13 போன் அறிமுகமாகும். மேலும் 2கே ரெசல்யூஷன் (2K resolution), எல்டிபிஓ டெக்னாலஜி (LTPO technology) மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 13 போன் அறிமுகமாகும்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 (Snapdragon 8 Gen 4 SoC) சிப்செட் உடன் இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த ஒன்பிளஸ் போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (ultrasonic in-screen fingerprint scanner)ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் பெரிஸ்கோப் டெலி போட்டோ லென்ஸுடன் கூடிய மல்டி-ஃபோகல் கேமரா சிஸ்டம் (multi-focal camera system) உடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவரும். குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா-வைட் லென்ஸ் + டெலி போட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 13 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 32எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

இப்படி ஒரு போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்..  50MP கேமரா.. எந்த மாடல்?

5500mAh பேட்டரி உடன் இந்த ஒன்பிளஸ் 13 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேற சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 13 போன் அறிமுகமாகும்.

குறிப்பாக ஒன்பிளஸ் 13 போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனாலும் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo courtesy:herzindagi.com, oneplus

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 launch timeline leaked online: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X