ஜனவரி 7 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது OnePlus 5ஜி போன்..
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போன்களை வரும் 2025 ஜனவரி 7-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் தனித்துவமான அம்சங்கள் மற்றும் அட்டகாசமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 specifications): 6.82-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் உடன் ஒன்பிளஸ் 13 போன் அறிமுகமாகும். மேலும் OxygenOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 13 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
6000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 13 போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளன. பின்பு 26ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது
ஒன்பிளஸ் 13ஆர் அம்சங்கள் (OnePlus 13R specifications): 6.78-இன்ச் LTPO OLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் உடன் ஒன்பிளஸ் 13ஆர் போன் அறிமுகமாகும். மேலும் OxygenOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 13ஆர் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்எஎன்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

6500mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 13 போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
குறிப்பாக ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் போன்கள் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போன்களில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








