அக்டோபர் 31 உறுதி.. சோனி கேமரா.. 6000mAh பேட்டரி.. வருகிறது OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் அக்டோபர் 31-ம் தேதி சீனாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில் ஒன்பிளஸ் 13 போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 Specifications): 6.82-இன்ச் அளவிலான 2K 10-பிட் LTPO BOE X2மைக்ரோ குவாட் கர்வ்டு OLED டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 13 போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite (8 Gen 4) SoC) உடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது ஒன்பிளஸ் 13 போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 24ஜிபி ரேம் + 1டிபி மெமரி உடன் இந்த ஒன்பிளஸ் 13 போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மேம்படுத்தப்பட்ட அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
50மெகாபிக்சல் சோனி LYT-808 ப்ரைமரி சென்சார் + 50மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் யூனிட் + 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. கலர்ஒஎஸ் 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13 போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 13 போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 13 ஆனது ஒரு பெரிய 6000mAh பேட்டரி உடன் வெளிவரும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி எஸ்ஏஃஎன்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6, புளூடூத் 5.4 (Bluetooth 5.4), பெய்டோ (Beidou), ஜிபிஎஸ் (GPS), க்ளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








