OnePlus 13 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக விலை ஆன்லைனில் கசிந்தது!
ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஒன்பிளஸ் 13 போனின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Tipster Abhishek Yadav) இந்த ஒன்பிளஸ் 13 போனின் பாக்ஸ் விலையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.64,999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளர். குறிப்பாக இந்த ஒன்பிளஸ் போனின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும். இப்போது ஆன்லைனில் வெளியான ஒன்பிளஸ் 13 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset)சிப்செட் உடன் ஒன்பிளஸ் 13 போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 6.82-இன்ச் 2கே அமோலெட் (2K AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
OxygenOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13 போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 13 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

6000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 13 போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளன. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவரும் இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன். மேலும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும்.ஆனால் ஒன்பிளஸ் 13 போனை விட சற்று குறைவான விலையில் ஒன்பிளஸ் 13ஆர் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








