Home
Mobile

அப்பாடா.. OnePlus ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்த Price.. OnePlus 13-ன் இந்திய விலை இவ்ளோதானா!

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது பெரிய அளவிலான ஆர்வம் இல்லாதவர்கள் மற்றும் "வரட்டும் வரட்டும் வச்சி செஞ்சிட வேண்டியது தான்" என்று பல்லை கடித்துக்கொண்டு காத்திருக்கும் விமர்சகர்களோடு சேர்ந்து ஒன்பிளஸ் பிராண்டட் ஸ்மார்ட்போன்களின் தீவிரமான ரசிகர்களும்.. ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்திற்காக காத்திருக்கின்ற்னர்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான இது ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டதால், இதன் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. இங்கே இருக்கும் ஒரே கேள்வி - ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படியிருக்கும்? என்பது தான்!

அப்பாடா.. OnePlus 13-ன் இந்திய விலை இவ்ளோதானா!

ஆரம்பகால லீக்ஸ்கள் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.80,000 வரை செல்லும் என்று கூறி, ஒன்பிளஸ் 13-க்காக காத்திருப்பவர்களின் தலையில் இடியை இறக்கின. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு சமீபத்திய தகவலானது, ஒன்பிளஸ் ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது என்றே கூறலாம்.

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ராரின் (Tipster Yogesh Brar) கணிப்பின்படி, இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை ரூ.67,000 முதல் ரூ.70,000 க்குள் இருக்கும். வேறு சில டிப்ஸ்டர்களும் கூட தத்தம் எக்ஸ் தளங்கள் வழியாக இதே கருத்தை எதிரொலிக்கின்றனர்.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்தியாவில் ரூ.64,999 க்கு அறிமுகமானது. மேற்குறிப்பிட்டுள்ள ஒன்பிளஸ் 13-ன் விலை நிர்ணயம் உண்மையாகும் பட்சத்தில் ஒன்பிளஸ் 12-க்கும், ஒன்பிளஸ் 13-க்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் வெறும் ரூ.3000 தான் இருக்கும்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையோடு சேர்த்து, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளன. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது - அது 12ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆக இருக்கலாம்; அதாவது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் நாம் கண்ட அதே வேரியண்ட்கள்!

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168×1440 பிக்சல்ஸ், 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி PWM டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது 900MHz அட்ரெனோ 830 ஜிபியு உடன் 4.32GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது. இது 12ஜிபி / 16ஜிபி / 24ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி / 512ஜிபி / 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது

கேமராக்களை பொறுத்தவரை இது 1/1.4-இன்ச் சோனி LYT-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் JN1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமரா + 1/1.95-இன்ச் LYT600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஹசல்பிளாட் (Hasselblad) கேமரா செட்டப் ஆனது 4கே 60fps வரை மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். முன்பக்கத்தில் சோனி IMX615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா (எப்/2.4 அபெர்க்ஷர், 4கே வரை 30 fps வீடியோ ரெக்கார்டிங்) உள்ளது பேட்டரியை பொறுத்தவரை இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 India Price Leaked Ahead January 7 Launch Could be Rs 67000 to Rs 70000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X