அதிர வைக்கும் விலை.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் வரும் 2025 ஜனவரி 7-ம் தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஒன்பிளஸ் போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி ஒன்பிளஸ் 13 போன் ஆனது ரூ.67,000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் இந்தியாவில் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 specifications): 6.82-இன்ச் 2கே அமோலெட் (2K AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset)சிப்செட் உடன் ஒன்பிளஸ் 13 போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
மேலும் OxygenOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13 போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
அதேபோல் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 13 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக 6000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 13 போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளன. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவரும் இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








