Home
Mobile

ரூ.11 கொடுத்தா ரூ.3,000 கிடைக்கும்.. OnePlus 13 இந்திய அறிமுக தேதி உடன் சுவாரசிய போட்டி அறிவிப்பு!

2025 புத்தாண்டுக்கு காத்திருப்பவர்களுக்கு இணையாக ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்திற்காக ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது (நாங்களும் தான்). சீனாவில் நடந்ததை போல.. வழக்கத்தை விட விரைவாக அறிமுகம் செய்யப்படுமா அல்லது வழக்கம் போல லேட் ஆகத்தான் வருமா என்கிற கேள்விக்கு விடை கிடைக்காமலேயே இருந்தது.

தற்போது ஒன்பிளஸ் நிறுவனமே, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா மற்றும் உலகளவிய சந்தைகளில் ஜனவரி 2025 இல் அறிமுகமாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது ஒன்பிளஸ் 13 நம்மில் பலருக்குமான 2025 பொங்கல் பரிசாக (2025 Pongal Gift) இருக்கும்.

OnePlus 13 இந்திய அறிமுக தேதி.. ரூ.11 கொடுத்தா ரூ.3,000 கிடைக்கும்!

இதோடு சேர்த்து ஒன்பிளஸ் 13 ஆனது ஆர்க்டிக் டான் (Arctic Dawn), பிளாக் எக்லிப்ஸ் (Black Eclipse) மற்றும் மிட்நைட் ஓஷன் (Midnight Ocean) ஆகிய மூன்று கலர்களில் அறிமுகமாகும் என்பதையும் ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. கூடவே ஒன்பிளஸ் 13 அறிமுகம் தொடர்பாக, மிகவும் சுவாரசியமான பரிசுப்போட்டி (Rewards Game) ஒன்றையும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை வெளிப்படுத்தும் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் 'லைவ்' ஆகியுள்ளது. அதில் "ஒன்பிளஸ் 13 விரைவில் வருகிறது" என்கிற வாசகத்தின் கீழ் நோட்டிஃபை மீ (Notify Me) பட்டன் ஒன்றும் இருக்கிறது. அந்த பட்டனை கிளிக் செய்து ஒன்பிளஸ் 13 போனஸ் டிராப்பை வெறும் ரூ.11-க்கு அன்லாக் செய்ய முடியும்.

5 மைல்ஸ்டோன்களை கொண்ட இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலம் ரூ.3,000 மதிப்புள்ள ஒன்பிளஸ் தயாரிப்புகளையும் மற்றும் 500 ரெட்காயின்களையும் வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த வெகுமதிகளின் ஒரு பகுதியாக ஒன்பிளஸ் டிராவல் கிட்டும் (OnePlus Travel Kit) கிடைக்கும்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டதால் இதன் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமுமில்லை. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168×1440 பிக்சல்ஸ், 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி PWM டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 13-ன் சிப்செட்டை பொறுத்தவரை இது 900MHz அட்ரெனோ 830 ஜிபியு உடன் 4.32GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது. இது 12ஜிபி / 16ஜிபி / 24ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி / 512ஜிபி / 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது

ஒன்பிளஸ் 13-ன் கேமராக்களை பொறுத்தவரை இது 1/1.4-இன்ச் சோனி LYT-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் JN1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமரா + 1/1.95-இன்ச் LYT600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஹசல்பிளாட் (Hasselblad) கேமரா செட்டப் ஆனது 4கே 60fps வரை மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். முன்பக்கத்தில் சோனி IMX615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா (எப்/2.4 அபெர்க்ஷர், 4கே வரை 30 fps வீடியோ ரெக்கார்டிங்) உள்ளது

ஒன்பிளஸ் 13-ன் பேட்டரியை பொறுத்தவரை இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், அகச்சிவப்பு சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 + IP69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது

மேலும் ஒன்பிளஸ் 13-இல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4-மைக்ரோஃபோன்கள், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் ஆதரவு, வைஃபை Wi-Fi 7 802.11 ax 2X2 MIMO, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் (L1+L5 டூயல் பேண்ட்) + க்ளோநாஸ் ஆகிய அம்சங்களும் உள்ளன. அளவீடுகளில், ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 162.9×76.5×8.5 ​​மிமீ (கிளாஸ்) / 8.8 மிமீ (லெதர்) உள்ளது. எடையில் 213 கிராம் (கிளாஸ்) / 210 கிராம் (லெதர்) உள்ளது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.. இதுவரையிலாக ஒன்பிளஸ் 13 விலை குறித்து எந்தவிதமான நம்பத்தகுந்த லீக்ஸ் தகவலும் வெளியாகவில்லை. ஆனாலும் இது பெரும்பாலும் ரூ.70,000 க்கு கீழ் என்கிற பட்ஜெட்டில் தன இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12, இந்தியாவில் ரூ.64,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே புதிய ஒன்பிளஸ் 13 ஆனது சில ஆயிரம் ரூபாய்கள் அதிகமாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 India Launch January 2025 Rs 3000 Free Products Announced For Rs 11 OnePlus Bonus Drop
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X