OnePlus 13 மீது வரலாறு காணாத விலை குறைப்பு!
இந்தியாவில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.61,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ரூ.8000 நேரடி விலை குறைப்பாகும், நினைவூட்டும் வண்ணம் இதே ஆப்ஷன் ரூ.69,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய தள்ளுபடியாகும்.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது
முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்: இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4-மைக்ரோஃபோன்கள், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
அடுத்து வரும் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது டிஸ்பிளே தொழில்நுட்ப ஆர்வலர்களை மிகவும் கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்க்கபடும் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கலாம். ஏனென்றால் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஒன்பிளஸ், அதன் ஒன்பிளஸ் 16 மாடலில் 240ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவை ஒருங்கிணைக்க விரும்புவதாக வதந்திகள் உள்ளன.
நினைவூட்டும் வண்ணம், சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 15 மாடலில் 165ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவு உள்ளது. ஆக ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 240ஹெர்ட்ஸ் இடம்பெறும் பட்சத்தில், அதுவொரு மிகப்பெரிய பாய்ச்சல் ஆக இருக்கும். ஆனால் ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ளதை போலவே இது எல்லா சூழ்நிலைகளிலும் கிடைக்காது; தேர்ந்தெடுக்கப்பட்ட கேம்களில் மட்டுமே கிடைக்கலாம்
இதோடு ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனியோல் 1.5K ரெசல்யூஷன் உடனான ஒரு பிளாட் ஆன LPTO OLED BOE X5 பேனல் இடம்பெறலாம். இது ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ளதை போன்றது. ஒன்பிளஸ் 16 டிசைனை பொறுத்தவரை பெரும்பாலும் ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ளதையே போலவே இருக்கலாம்.
மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்பால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கக்கூடிய ஒரு பெரிய 9000mAh பேட்டரியையும் பேக் செய்யலாம். எல்லாவற்றை விட முக்கியமாக "முதல் முறையாக" ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 16 வழியாக 200எம்பி கேமரா சென்சாரையும் கொண்டு வரலாம்.


Click it and Unblock the Notifications








