iPhone 17 வந்துடுச்சுல.. இனிமேல் இப்படித்தான்.. இரவோடு இரவாக இந்த OnePlus போன் மீது ரூ.4400 விலை குறைப்பு!
ஆப்பிள் (Apple) நிறுவனம் புதிய ஐபோன் ஏர் (iPhone Air) மாடல் உட்பட மேம்பட்ட அம்சங்களுடன் அதன் ஐபோன் 17 சீரீஸ் மாடல்களை அறிமுகம் செய்து ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் மிரளவிட்டுள்ளது. வழக்கமாக புதிய ஐபோன்கள் அறிமுகமானதும் பழைய ஐபோன்களின் விலைகள் தான் குறையும்.
ஆனால் இம்முறை மற்ற நிறுவனங்களின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலைகளும் (புதிய மற்றும் பழைய ஐபோன்களுடன் போட்டியிடும்படி) குறைக்கப்பட்டு வருகின்றன. ஐபோன் 17 அறிமுகமாகும் முன்பே பிக்சல் 9 மாடல் ஆனது பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் மீது ரூ.4400 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் 13 ஆனது கடந்த ஜனவரி 2025 இல் ரூ.69,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமானது. இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.4,400 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.65,499 என்கிற தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
கூடுதலாக கிடைக்கும் பேங்க் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர்களை பயன்படுத்தினால் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்க முடியும். வரவிருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 விற்பனையின் போது, ஒன்பிளஸ் 13 மாடலின் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் அதில் எந்த உத்திரவாதமும் இல்லை; ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இப்போதே வாங்கலாம்.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது 2கே பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் 4,500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.82-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 8 Elite SoC கொண்டு இயக்கப்படுகிறது
ஒரு பெரிய 6,000mAh பேட்டரியை பேக் செய்யும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக, கேமராக்களை பொறுத்தவரை, பின்புறம் 50எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
கூகுள் பிக்சல் 9 மீதான ஆபர்: பிளிப்கார்ட் வலைதளத்தில், வரவிருக்கும் சிறப்பு விற்பனையின் போது இது ரூ.40,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்த போஸ்டரில், செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025-ன் போது பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.3X,XX9 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- 6.3 இன்ச் ஆக்சுலா ஓஎல்இடி டிஸ்பிளே
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசருடன் டென்சர் ஜி4 சிப்செட்
- 50 மெகாபிக்சல் ஆக்டா பிடி வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் 8எக்ஸ் சூப்பர் ரெஸ் ஜூம்) ப்ரைமரி கேமரா
- 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா
- ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ கேமரா
- 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4700எம்ஏஎச் பேட்டரி
புதிய ஐபோன் 17 சீரீஸ் விலை விவரங்கள்:
1. ஐபோன் 17 - ரூ.82,900 முதல்
2. ஐபோன் ஏர் - ரூ.1,19,900 முதல்
3. ஐபோன் 17 ப்ரோ - ரூ.1,34,900 முதல்
4. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,49,900 முதல்


Click it and Unblock the Notifications








