அடிமட்ட விலைக்கு வந்த OnePlus போன்.. 5ஜி, 100W சார்ஜிங், 6000mAh பேட்டரி, மூன்று 50MP கேமரா.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி, விற்பனைக்கு வந்த வேகத்தில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் விலை அதிகாரப்பூர்வமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 13-ன் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? ஒன்பிளஸ் 15-ன் விலை என்ன? இதன் மீது என்னன்ன அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் 13 பழைய விலை VS புதிய விலை: ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளத்தில் தற்போது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.4000 விலை குறைப்பை பெற்றுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இதே ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கு இந்தியாவில் அறிமுகமானது. தற்போது இது ரூ.65,999 க்கு வாங்க கிடைக்கிறது.

பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவிலும் (Amazon India) இதே விலை (ரூ.65,999) பிரதிபலிக்கிறது. ஆனால் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் ஆனது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மிட்நைட் ஓஷன் (ப்ளூ) கலர் ஆப்ஷனை இன்னும் மலிவாக, ரூ.62,487 க்கு விற்பனை செய்கிறது (ரூ.7500 விலை குறைப்பு).
புதிய ஒன்பிளஸ் 15 அசல் விலை VS ஆபர் விலை: இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகையாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை வாங்க எச்டிஎப்சி (HDFC) வங்கியின் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்துவதன் மூலம் (பேமண்ட் முறையை) பொறுத்து ரூ.4000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் 12ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.68,999 க்கும், 16ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.75,999 க்கும் வாங்க முடியும்.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது
முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே (1272 x 2772 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 330 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் கலர்களுக்கான ஆதரவு உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 2 பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் 6 எபிஷியன்ஸி கோர்களை கொண்டுள்ளது. மேலும் 4.608ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக் ஸ்பீடையும் வழங்குகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் அல்ட்ரா பிளஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 24மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா உள்ளன. இதன் ரியர் கேமரா யூனிட்டால் 30 எப்பிஎஸ்-இல் 8கே வீடியோக்களை படமாக்க முடியும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மாட்போன் ஆனது 7300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறு
வனத்தின் கூற்றுப்படி, இது சுமார் 39 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








