இதுக்கு தான் தீபாவளி வரணும்றது.. எந்த பேங்க் கார்டும் வேணாம்.. நேரடி விலை குறைப்பில் லேட்டஸ்ட் OnePlus போன்!
அம்புட்டு பேரும் ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தி மீது கண்வைத்து காத்திருக்கும் நேரத்தில்.. அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது அதன் லேட்டஸ்ட் 2025 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மீது "எந்த பேங்க் கார்டும் தேவைப்படாத" நேரடி விலை குறைப்பை அறிவித்து, அதிரடி காட்டியுள்ளது!
அமேசானில் நடக்கும் 2025 தீபாவளி சிறப்பே விற்பனையின் ஒரு பகுதியாக, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மீது நேரடியாக ரூ.6000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ரூ.69,999 க்கு அறிமுகமான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.63,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.63,999 என்கிற ஆபர் விலையை பெற உங்களிடம் எந்த பேங்க் கார்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவொரு நேரடி விலை குறைப்பாகும். ஒருவேளை நீங்கள் பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபரையும் பயன்படுத்த விரும்பினால்.. தாராளமாக செய்யலாம்; ஒன்பிளஸ் 13 விலையை இன்னும் குறைக்கலாம்.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது. இதோடு 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5 செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமராவும் உள்ளது.
கடைசியாக 1/1.95-இன்ச் எல்ஒய்டி600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிறது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? எப்போது சீன அறிமுகம்? எப்போது இந்திய அறிமுகம்? ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.70,000 முதல் ரூ.75,000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. சீன அறிமுகம் இந்த (அக்டோபர்) மாதமும், இந்திய அறிமுகம் அடுத்த (நவம்பர்) மாதமும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








