ப்பா.. OnePlus 13 என்ன இப்படி இருக்கு.. 24GB ரேம், 1TB மெமரி, 6000mAh பேட்டரி, IP68/69 ரேட்டிங்.. என்ன விலை?
ஒருவழியாக ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் நாளை சீனாவில் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன், அக்டோபர் 31ஆம் தேதி, சீன நேரப்படி மாலை 4 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் இது அடுத்த 2025 ஆம் ஆண்டு தான் அறிமுகமாகும் என்றாலும் கூட, இந்தியர்கள் மத்தியில் ஒன்பிளஸ் 13-க்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகவே உள்ளது!
அந்த எதிர்பார்ப்புகளை இன்னும் எகிறவைக்கும்படியாக, அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பாகவே டிஇஎன்ஏஏ (TENAA) லிஸ்டிங்கில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. டிஇஎன்ஏஏ பட்டியலின் படி, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 6.82 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே 3168 x 1440 பிக்சல்கள் அளவிலான 2கே ரெசல்யூஷனை வழங்கும் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும்.

கூடுதலாக, இதன் ஸ்க்ரீனில் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரண்ட் சென்சார் இருக்கும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ்15 (ColorOS 15) உடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 12 ஜிபி, 16 ஜிபி மற்றும் 24 ஜிபி உள்ளிட்ட பல்வேறு ரேம் விருப்பங்களின் கீழ் வெளியாகும். இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஆகிய விருப்பங்கள் இருக்கும்.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வழியாக இது 6,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்பதைஅறிய முடிகிறது. அதாவது ஒன்பிளஸ் 13 ஆனது இதுவரை நாம் பார்த்த எந்தஒன்பிளஸ் மாடலில் இல்லாத அளவிலான மிகப்பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும். இன்னொரு போஸ்டர் இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் எடை 213 கிராமாக இருக்கும். அளவீட்டில் 162 x 76.5 x 8.5மிமீ இருக்கும். பெரிய பேட்டரி அளவு காரணமாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது திடமான மற்றும் சற்று கனமான டிவைஸ் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும்.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் LYT-808 ப்ரைமரி கேமரா + ஓஐஎஸ் ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும். முன்பக்கத்தில் செல்பீகளுக்காக 32 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும்.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் ஒரு IR பிளாஸ்டர், ஒரு மல்டிஃபங்க்ஸ்னல் NFC, மேம்படுத்தப்பட்ட வைப்ரேஷன் மோட்டார் மற்றும் ஐபி68 / 69-லெவல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங் போன்ற அம்சங்களும் இருக்கும். ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆபத்து கருப்பு, வெள்ளை மற்றும் நீலம் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும்.
கூடுதலாக, ஒன்பிளஸ் நிறுவனம் மேக்னட்டிக் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கேஸ்களை அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W UFCS (யுனிவர்சல் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டாண்டர்ட்) நெறிமுறையையும் ஆதரிக்கிறது, இது மூன்றாம் தரப்பு அடாப்டர்களுடன் கூட பாஸ்ட் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் சூப்பர்வூக் எஸ் சிப் ஒருங்கிணைப்பும் உள்ளது, இது 99.5% தீஸ்சார்ஜ் செயல்திறனை வழங்குகிறது. இதன் மூலம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேட்டரி அவுட்புட் ஆனது திறமையாக மேம்படுத்தப்படும் ஒன்பிளஸ் பிராண்டால் வெளியிடப்பட்ட மற்ற போஸ்டர்கள் ஆனது, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் இடது பக்கத்தில் ஒரு அலெர்ட் ஸ்லைடர் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஏஐ நாய்ஸ் ரிடெக்ஷனிற்கான நான்கு மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட அம்சங்களையும் பேக் செய்யும். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை. ஆரம்பத்தில் இது ரூ.70,000 க்கு அருகிலான விலைக்கு வரும் கூறப்பட்டது. ஆனால் இதன் முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் ரூ.77,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Photo Courtesy: OnePlus Club X Page (@OnePlusClub)


Click it and Unblock the Notifications








