Home
Mobile

தப்பு கணக்கு போட்றாதீங்க.. OnePlus 13 அவசரமா வருது, மொக்கையா இருக்கும்னு! டிஸ்பிளேவில் 2 நுணுக்கமான அம்சங்கள்!

ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி (Launch Date) இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஒன்பிளஸ் 13 மாடல், இந்த அக்டோபர் மாதமே அறிமுகமாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதாவது எதிர்பார்க்கப்பட்டதை விட 2 மாதங்களுக்கு முன்பாகவே அறிமுகமாகிறது.

அவசர அவசரமாக அறிமுகம் செய்யப்படுவதால் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் கொஞ்சம் மொக்கையாக தான் இருக்குமோ என்கிற சந்தேகம் உங்களில் யாருக்காவது இருந்தால்.. அதை தவிடு பொடியாக்கும் படியான பல தகவல்கள் "தொடர்ச்சியாக" வெளியான வண்ணம் உள்ளன. முன்னதாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது 2கே ரெசல்யூஷன் உடனான BOE X2 பேனல் உடன் வரும் என்கிற தகவல் வெளியானது.

OnePlus 13 டிஸ்பிளேவில் 2 நுணுக்கமான அம்சங்கள்!

தற்போது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் மேலும் 2 "நுணுக்கமான" மற்றும் "முக்கியமான" அம்சங்கள் இடம்பெறலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி ஒன்பிளஸ் 13 ஆனது 2கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான BOE X2 "ஓரியண்டல்" டிஸ்பிளேவை பெறும் என்றும், அத ஒரு "சூப்பர் செராமிக் கிளாஸ்" அமைப்பை கொண்டிருக்கும் 8T LTPO பேனல் ஆக இருக்கும் என்றும் பரிந்துரைக்கிறது

மேலும் ஒன்பிளஸ் 13 ஆனது அதன் டிஸ்பிளேவிற்குள் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரை உட்பொதிக்ககலாம் என்றும், இது சூப்பர் ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் சாஃப்ட் எட்ஜ் ஃபோர்-லெவல் டெப்த் போன்ற அம்சங்களை ஆதரிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13-ன் டிஸ்பிளேயின் சர்க்யூட்ரி ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு அதன் ஆப்டிகல் கேவிட்டி அமைப்பு மறுசீரமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை - ஒன்பிளஸ் 13 டிஸ்பிளேவின் ப்ரைட்னஸ் மற்றும் பேட்டரி லைஃப்பில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். சுவாரசியமாக ஒன்பிளஸ் 13-ல் பல்ஸ் விட்த் மாடுலேஷன் (பிடபிள்யூஎம்) டிம்மிகிங்கிற்கான புதிய சொல்யூஷனும் கொண்டுவரப்படவுள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான ஒரு அறிக்கை, ஒன்பிளஸ் 13-ல் குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி (Snapdragon 8 Elite SoC) பேக் செய்யப்படும் என்று கூறியிருந்தது. இந்த சிப்செட் அக்டோபர் 22 ஆம் தேதி அன்று குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டின் போது அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் மட்டுமல்ல இந்த சிப்செட் ஷாவ்மீ (Xiaomi), ஒப்போ (Oppo) மற்றும் ஐக்யூ (iQOO) போன்ற நிறுவனங்களின் அடுத்துவரும் புதிய ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது "மேக்னடிக் சக்ஷன் பங்க்ஷன் உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் ஒன்பிளஸ் 13-ல் மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரவு இருக்கும் என்பதை வெளிப்டையாகவிபே புரிந்துகொள்ள முடிகிறது.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, டிப்ஸ்டர் யோகேஷ் ப்ராரின் (@heyitsyogesh) கூற்றுப்படி, ஒன்பிளஸ் 13-ல் மிகப்பெரிய 6000mAh பேட்டரி இடம்பெறலாம். இது ஒன்பிளஸ் 12-ல் பேக் செய்யப்பட்டுள்ள 5400எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்பிடும் போது "மிகப்பெரிய" அப்கிரேட் ஆக இருக்கும். இருப்பினும் ஒன்பிளஸ் 13 ஆனது ஒன்பிளஸ் 12 மாடலை போலவே 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் தான் வரும் என்றும் அவர் யூகித்துளார்.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் சோனி LYT-808 சென்சார் மற்றும் எப்/1.6 அபெக்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஆனது ரூ.65,000 - ரூ.70,000 க்குள் எங்காவது ஒரு புள்ளியில் அமரலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus 13 Display May Get Additional Features Ultrasonic Fingerprint Sensor Super Ceramic Glass
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X