Home
Mobile

OnePlus 13-ல் முக்கிய அப்கிரேட்.. இது ஒன்னு போதுமே.. கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்!

OnePlus 13: ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13 குறித்து நாளுக்கு ஒரு புதுப்புது அப்டேட் கிடைத்த வண்ணம் உள்ளது. சுவாரசியமாக அவைகள் எல்லாமே "சூப்பர் அப்டேட்ஸ்களாக" உள்ளன. முன்னதாக ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் அறிமுகமானது 2 மாதங்களுக்கு முன்கூட்டியே நடக்கும் என்கிற தகவல் வெளியானது. தற்போது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) உடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் 13 மாடலுக்கு வரும் ஒரு முக்கிய அப்கிரேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன அப்கிரேட்? இதோ விவரங்கள்:

முன்னரே குறிப்பிட்டபடி, ஒன்பிளஸ் 13 அறிமுகம் சற்றே முன்னதாக, அதாவது 2024 அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்யும் வண்ணம், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய அம்சம் ஒன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

OnePlus 13-ல் முக்கிய அப்கிரேட்.. இது ஒன்னு போதுமே!

ஒன்பிளஸ் தலைவர் ஆன லி ஜி லூயிஸ் (Li Jie Louis) வரவிருக்கும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் BOE X2 டிஸ்பிளே இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் BOE X1 டிஸ்பிளே உள்ளது. சீனாவில் நடந்த BOE குளோபல் இன்னோவேஷன் பார்ட்னர் மாநாட்டில், BOE X2 டிஸ்பிளே அறிவிக்கப்பட்டது.

BOE X2 டிஸ்பிளேவானது ஒன்பிளஸ் 12 உடன் ஒப்பிடும் போது இன்னும் சிறந்த "ஹை ப்ரைட்னஸ்" மற்றும் மேம்படுத்தப்பட்ட "ஐ ப்ரொடெக்ஷன் எக்ஸ்பீரியன்ஸை" வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 600 நிட்ஸ் டிப்பிக்கல் ப்ரைட்னஸ் மற்றும் 1600 நிட்ஸ் ஹை பிரைட்னஸ் மோட்-ஐ கொண்டுள்ளது.

ஆக எப்படி பார்த்தாலும், ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ப்ரைட்னஸ் அளவீடுகள் மேற்கண்ட அளவுகளை விட நிச்சயம் அதிகமாகவே இருக்கும்; அது எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால் இப்போதைக்கு ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் தான் தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் பெஸ்ட் "லோ ப்ளூ லைட் டிஸ்பிளேவை" கொண்ட ஸ்மார்ட்போனாகும்.

மேலும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 6.82-இன்ச் 2K AMOLED டிஸ்பிளே ஆனது டிஸ்ப்ளேமேட் மூலம் A+ மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. இதெல்லாம் சேர்ந்து ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் BOE X2 டிஸ்பிளேவை இன்னும் சிறப்பானதாக மாற்றும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் 2K 8T LTPO மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளே இடம்பெறலாம். இது 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உடன் வரலாம்.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4 chipset) மூலம் இயக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஆனது எப்/1.6 அபெக்ஷர் உடனான 50-மெகாபிக்சல் சோனி எல்ஒய்டிT-808 கேமரா சென்சாரை (Sony LYT-808 camera sensor) பேக் செய்யலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் O916T ஹாப்டிக் மோட்டாருடன் (O916T haptic motor) வரும் என்றும் கூறப்படுகிறது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்கையும் (IP69 Rating) பெறலாம். மேலும் இது அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் (ultrasonic fingerprint scanner) பெறலாம்.

இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் இது ரூ.65,000-க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மாட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகமானது.

Best Mobiles in India

English summary
OnePlus 13 BOE X2 display confirmed It Gives Better High Brightness Eye Protection Experience
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X