OnePlus 13-ல் இவ்ளோ பெரிய பேட்டரி-ஆ.. இந்த ஒரு காரணம் போதுமே இந்தியாவில் ஆர்டர் அள்ளுமே!
ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, இந்த மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போன் குறித்து, தொடர்ச்சியான வண்ணம் பல வகையான தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அதனொரு பகுதியாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேட்டரி கெப்பாசிட்டி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் திறன்கள் குறித்து தரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதென்ன தகவல்? ஒன்பிளஸ் 13 வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்?
நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ரார் (@heyitsyogesh), ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அதன் முன்னோடியுடன் (ஒன்பிளஸ் 12 உடன்) ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க பேட்டரி மேம்படுத்தலை பெறும் என்று கூறுகிறார். ஒன்பிளஸ் 13 ஆனது 6000mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 5400எம்ஏஎச் பேட்டரியுடன் வந்தது.

கூடவே ஒன்பிளஸ் 13 ஆனது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் நாம் கண்ட 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் தக்கவைத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஒன்பிளஸ் 12 மாடலை போலவே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனும் கூட வெறும் 37 நிமிடங்களில் அதன் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யும்.
பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்கள், ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் போது பேட்டரி கெப்பாசிட்டி மீது அதிக கவனம் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் மீது இந்தியர்களுக்கு ஒரு தனி கண் உண்டு. இதன் விளைவாகவே சாம்சங்கின் 6000எம்ஏஎச் பேட்டரி போன்கள் இந்திய சந்தையில் நல்ல விற்பனையை காணுகின்றன.
இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனமும் ஒரு 6000எம்ஏஎச் பேட்டரி ஸ்மார்ட்போனை களமிறக்கினால், இது வெறுமனே ஒரு பேட்டரி மேம்படுத்தலாக மட்டும் இருக்காது. சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) மற்றும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 9 Pro XL) உள்ளிட்ட பிற ஃபிளாக்ஷிப்களுக்கு வேட்டு வைத்தது போல் இருக்கும். நினைவூட்டும் வண்ணம் மேற்கண்ட 2 போன்களும் முறையே 5000mAh மற்றும் 5060mAh பேட்டரிகளுடன் வருகின்றன.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது பிஓஇ எக்ஸ்2 (BOE X2) டிஸ்பிளேவுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic Fingerprint Sensor) சேர்க்கப்படலாம். இது 24ஜிபி வரையிலான ரேம் உடன் வரலா.
இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் சோனி LYT-808 சென்சார் மற்றும் எப்/1.6 அபெக்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கும். இதன் கேமரா செட்டப்பில் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் பேக் செய்யப்படலாம்.
இந்த ஸ்மார்ட்போனின் இமேஜ் ப்ராசஸிங் அல்காரிதம் (Image Processing Algorithm) ஆனது ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரிஸ் (Oppo Find X8 Series) உடன் ஒற்றுப்போக வாய்ப்புள்ளது. கூடவே ஒன்பிளஸ் நிறுவனம் ஹசல்பிளாட் (Hasselblad) உடனான நீண்டகால கூட்டாண்மையும் தக்கவைத்துக்கொள்ளும்.
ஒன்பிளஸ் 13 என்ன விலைக்கு வரும்? பெரும்பாலும் இது ஒன்பிளஸ் 12-க்கு சமமான விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 இந்தியாவில் ரூ.64,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ரூ.65,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம். ஆனால் ஒன்பிளஸ் 13-ன் முக்கிய மேம்பாடுகளை கருத்தில் கொண்டால், விலையில் சில ஆயிரங்கள் அதிகரிப்பை நாம் காணலாம். இப்போதைக்கு இது ரூ.70,000 க்குள் என்கிற விலைக்கு வரும் என்று எதிர்பார்ப்பது நல்லது!


Click it and Unblock the Notifications








