ஆக்ரோஷமா வெளிவர போறான் OnePlus 13.. எல்லா அம்சமும் ஆர்ப்பரிக்குது.. எப்போது அறிமுகம் தெரியுமா?
ஒன்பிளஸ் (Oneplus) நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் கில்லர் சாதனமான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் பட்ஜெட் செக்மென்ட் (Budget Segment) சாதனமான ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை நிறுவனம் இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 13 சீரிஸ் (OnePlus 13 Series) போன்களின் அறிமுகத்திற்கு முன்பாக, இந்த சாதனங்கள் பற்றிய சில முக்கியமான தகவல்கள் தற்போது இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது. புதிதாக வெளிவரவிருக்கும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் என்னென்ன புது அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பது இங்கே.
இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து, ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை பற்றியும் பல தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது தோன்றி மறைந்தது. இப்போது, இறுதியாக இந்த வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் என்ன அம்சங்கள் இடம்பெறும் என்று குறிப்பிட்ட அளவு உறுதியான தகவல் தற்போது இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R):
சமீபத்தில் லீக் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தகவலின் படி, ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் சாதனம் முன்பை விட சக்தி வாய்ந்த சாதனமாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. காரணம், இதில் 2K LTPO OLED டிஸ்பிளே இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4 SoC) உடன் வெளிவரும் முதல் பிளாக்ஷிப் போனாக இது இருக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக, இந்த ஒன்பிளஸ் 13 (OnePlus 13) போனில் எதிர்பார்க்கப்படும் மற்றொரு சிறப்பம்சம் IP69 ரேட்டிங் பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு அம்சமாகும். இதுவும் முதல் முறையாக இந்த போனில் தான் இடம்பெறப்போகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முன்பு IP68 சான்றை பெற்ற முதல் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 8 ப்ரோ இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் 13 (OnePlus 13) போனில் அல்ட்ரா சோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (ultrasonic fingerprint scanner) அம்சமும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக ஒன்பிளஸ் 13 போனில் அல்ட்ரா லார்ஜ் சிலிக்கான் நெகட்டிவ் எலெக்ட்ரோட் பேட்டரி (ultra-large silicon negative electrode battery) வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது வழக்கத்தை விட அதிக பேட்டரி ஆயுளை கொண்ட தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பரிக்கும் 6100mAh பவருடன் ஒரு மெகா சைஸ் பேட்டரி:
பேட்டரி அளவை பற்றி பேசுகையில், ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் சாதனம் 6000mAh அல்லது 6100mAh பேட்டரியை பேக் செய்யுமென்றும், இது 100W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 13 (OnePlus 13) போன் 50MP சோனி LYT-808 சென்சார் கொண்ட மெயின் கேமரா உடன் 64MP OV64B பெரிஸ்கோப் டெலிபோட்டோ சென்சார் போன்றவற்றை கொண்டிருக்குமென்று கூறப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 13 நவம்பர் அல்லது டிசம்பரில் வெளிவருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








