Home
Mobile

OnePlus-க்கு அடிச்சது யோகம்.. ரூ.5,000 விலை கம்மி.. 6000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பிரியர்களை அடிச்சு புடிச்சு ஆர்டர் போட வைக்கும்படி ஏப்ரல் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரையில் ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் சேல் (OnePlus Red Rush Days Sale) நடக்கிறது. அமேசான், ஒன்பிளஸ் ஸ்டோர், குரோமா, விஜய் சேல் போன்ற பல்வேறு தளங்களில் விற்பனை தொடங்கி இருக்கிறது. இதில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) போனுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 13 விலை, அம்சங்கள் (OnePlus 13 Price, Specifcations): இந்த ஒன்பிளஸ் போனின் 12 ஜிபி ரேம் + 256 மெமரி மாடலின் விலை ரூ.69,998ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.76,998ஆக இருக்கிறது. இந்த விலையில் ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையை முன்னிட்டு ரூ.5,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

OnePlus-க்கு அடிச்சது யோகம்.. ரூ.5,000 விலை கம்மி.. 6000mAh பேட்டரி!

ரூ.7,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது. ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு (ICICI Bank Credit Card) இந்த பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.64,998 பட்ஜெட்டில் இந்த ஒன்பிளஸ் 13 போனை ஆர்டர் செய்ய முடியும். மிட்நைட் ஓசன், பிளாக் எலிப்ஸ், ஆர்டிக் டவுன் கலர்களில் கிடைக்கிறது.

6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமல்லாமல், செராமிக் குவார்ட் பாதுகாப்பு கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ஆக்ஸிஜன்ஓஸ் 15 மற்றும் சோனி எல்ஒய்டி 808 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. சாம்சங் ஜேஎன்1 சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு + சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ + சோனி ஐஎம்எக்ஸ் 615 சென்சாருடன் 32 எம்பி செல்பீ உள்ளது. 6000mAh பேட்டரி, ஃபாஸ்ட் 100W சார்ஜிங் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13ஆர் விலை, அம்சங்கள் (OnePlus 13R Price, Specifcations): இந்த ஒன்பிளஸ் போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.48,998ஆகவும் 12ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.42,998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையை முன்னிட்டு ரூ.3,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மேலும், முந்தைய மாடலுக்கு கிடைத்ததை போலவே எக்ஸ்சேஞ்ச் போனஸ், நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது. ஆகவே, ரூ.4,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. இதற்கும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். இந்த டிஸ்கவுண்ட் மூலம் ரூ.44,998 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த போனில் 80W சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் சிப்செட், அட்ரினோ 750 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 வருகிறது. சோனி எல்ஒய்டி 700 சென்சாருடன் 50 எம்பி மெயின் + சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

சாம்சங் ஜேஎன்1 சென்சாருடன் டெலிபோட்டோ மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்480 சென்சாருடன் செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. நெபுளா நோயர் மற்றும் அஸ்ட்ரால் டிரெயில் கலர்களில் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையானது ஏப்ரல் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரையில் மட்டுமே நடக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 And OnePlus 13R Gets Huge Discount on OnePlus Red Rush Days Sale From April 8 To April 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X