Home
Mobile

அமேசான் பத்திக்கிச்சு.. ரூ.20000 வரலாற்று தள்ளுபடி.. அடிமட்ட விலையில் 6000mAh பேட்டரி OnePlus 5ஜி போன்!

அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது ஜூலை 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, அமேசான் ப்ரைம் டே சேல் 2026 (Amazon Prime Day Sale 2026) என்கிற சிறப்பு விற்பனை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.இதற்கு போட்டியாக பிளிப்கார்ட் வலைத்தளமும் கோட் சேல் 2026 (Flipkart GOAT Sale 2026) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதுவும் அதே ஜூலை 4-6 நடக்கவுள்ளது.

"தம்பி தேதிகள் வேண்டுமானால் ஒரே மாதிரி இருக்கலாம் ஆனால் என்னுடைய ஆபர்கள் வேற மாதிரி இருக்கும்" என்று கூறும்படியாக அமேசான் தளமானது ஸ்மார்ட்போன்கள் மீதான முரட்டு ஆபர்களை வெளிப்படுத்தி வருகிறது. அதில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 6000mAh பேட்டரி கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றும் அடங்கும். இது ரூ.20000 என்கிற வரலாற்று தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட விலையில் 6000mAh பேட்டரி OnePlus 5ஜி போன்!

அது ஒன்பிளஸ் 13 5ஜி (OnePlus 13 5G) ஸ்மார்ட்போன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இது ரூ.69,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஜூலை 4-6 வரை நடக்கும் அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அறிமுக விலையுடன் ஒப்பிடும் போது ரூ.20000 தள்ளுபடி ஆகும்.

இது வங்கி சலுகைகளை உள்ளடக்கிய விலையாக இருக்கும் என்றும் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போனின் மீது நேரடியாக ரூ.20000 விலை குறைப்பு இருக்காது. மாறாக விலை குறைப்பு + பேங்க் ஆபர் ஆகிய இரண்டும் சேர்ந்து ரூ.20000 டிஸ்கவுண்ட்டை கொண்டுவரலாம்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது

முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 13 5G to gets Rs 20000 Historic Discount in Amazon Prime Day Sale Starts July 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X