ரூ.13,000 வரை குறைத்து.. ஆஃபர் விலையில் OnePlus 13 5G ஸ்மார்ட்போனை வாங்குவது எப்படி?
கடந்த ஜனவரி 7ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13 5ஜி (OnePlus 13 5G) ஸ்மார்ட்போன் ஆனது இன்று (ஜனவரி 10 ஆம் தேதி) திறந்த விற்பனைக்கு வருகிறது. ஒன்பிளஸ் 13 மீது சில அறிமுக சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ரூ.13,000 வரை குறைத்து, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை ஆபர் விலையில் வாங்க முடியும்.
ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.69,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கும். கூடவே ரூ.7000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.13,000 வரை குறைக்க முடியும்.

இவ்விரு ஆபர்களும் (பேங்க் மற்றும் எக்ஸ்சேன்ஜ்) ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது மட்டுமல்ல 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் மீது கிடைக்கிறது. இந்த ஆப்ஷனின் அசல் விலை ரூ.76,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் ரூ.71,999 க்கு கிடைக்கும்; கூடவே 7000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கும்.
இதேபோல ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட்24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கும்; கூடவே 7000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கும்.
ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போனின் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே இன்று (ஜனவரி 10 ஆம் தேதி) மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளன. இவைகள் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாக வாங்க கிடக்கும்.
ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதி 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது இதோடு 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5 செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமராவும் உள்ளது.
கடைசியாக 1/1.95-இன்ச் எல்ஒய்டி600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது முந்தைய மாடல்களை போலவே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனும் ஹசல்பிளாட் பிராண்டட் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது.
இந்த கேமரா செட்டப் ஆனது 4கே (60எஃப்பிஎஸ் வரை) மற்றும் 8கே வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும்.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கான மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் கேஸ்கள் தனியாக வாங்க கிடைக்கும்.
மேலும் இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4-மைக்ரோஃபோன்கள், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








