Home
Mobile

சபாஷ் சரியான போட்டி.. iPhone 16e விற்பனையை கவிழ்க்க OnePlus 13, OnePlus 13R மீது திடீர் டிஸ்கவுண்ட்.. எவ்வளவு?

ரூ.59,900 க்கு ஐபோன் 16இ மாடலின் இந்திய விற்பனை தொடங்கி சில நாட்கள் ஆகும் நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் மாடல்கள் ஆன ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடல்கள் மீது திடீர் டிஸ்கவுண்ட்டை அறிவித்து உள்ளது.

ஒன்பிளஸ் இந்தியா நிறுவனமானது மார்ச் 9 வரை நடக்கும், ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் (OnePlus Red Rush Days) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதன் கீழ் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கும், ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,999 க்கும் வாங்க கிடைக்கும்.

OnePlus 13, OnePlus 13R மீது திடீர் டிஸ்கவுண்ட்.. எவ்வளவு?

இவ்விரண்டுமே பேங்க் டிஸ்கவுண்ட்டை உள்ளடக்கிய ஆபர் விலையாகும். நினைவூட்டும் வண்ணம், அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.69,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.64,999 க்கு வாங்க கிடைத்தது. தற்போது அதே ஆபர் மீண்டும் கிடைக்கிறது.

இதேபோல ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் மீதும் ஆபர் கிடைக்கிறது. ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ்-ன் கீழ் ஒன்பிளஸ் 13ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் +512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு பதிலாக ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும். அதாவது ஒன்பிளஸ் 13 மீது கிடைப்பதை போலவே, இதன் மீதும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபர் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் டிஸ்பிளே: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதி 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது இதோடு 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5 செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமராவும் உள்ளது.

கடைசியாக 1/1.95-இன்ச் எல்ஒய்டி600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும்.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கான மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் கேஸ்கள் தனியாக வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 5G OnePlus 13R 5G Gets Discount in OnePlus Red Rush Sale Until 2025 March 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X