Home
Mobile

இப்போதைக்கு புதிய போன் வாங்கிடாதீங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! வருகிறது புதிய OnePlus போன்.! என்ன மாடல்?

சியோமி, விவோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒரு அட்டகாசமான ஸமார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ்.

அதாவது ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) எனும் ஸ்மார்ட்போனை தான் ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 12ஆர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் 12ஆர் போனின் அம்சங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! வருகிறது புதிய OnePlus போன்.! என்ன மாடல்?

ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 1.5கே ஒஎல்இடி டிஸபிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 2772 × 1240 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 3.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் உடன் அட்ரினோ 740 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன். மேலும் OxygenOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் வெளிவரும். குறிப்பாக இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 32எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டு வெளிவரும் இந்த போன்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! வருகிறது புதிய OnePlus போன்.! என்ன மாடல்?

5500 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

5ஜி, வைஃபை 802.11 எசி, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சற்று உயர்வான விலையில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

photo courtesy: @OnLeaks, mysmartprice.com

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R with Snapdragon 8 Gen 2, 32MP telephoto camera will be launched next year: Check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X