Home
Mobile

SALE அதிருது.. ரூ.3000 விலை குறைப்பு.. அடிச்சு புடிச்சு ஆர்டர்.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

இப்படிவொரு போனுக்குத்தான் வெயிட் பண்ணோம் என்று சொல்லும்படி 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி, சோனி சென்சார் கேமரா, 3டி கவ்ர்ட் டிஸ்பிளே போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் மார்கெட்டுக்கு வந்த ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) போனுக்கு ரூ.3000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த பிரீமியம் போன் பிரியர்களையும் மிட்-ரேஞ்ச் விலையில் கட்டிப் போடும்படியான டிசைனில் கிடைக்கும் இந்த ஒன்பிளஸ் 12ஆர் போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்ப்போம்.

ஒன்பிளஸ் 12ஆர் அமேசான் சேல் (OnePlus 12R Amazon Sale): இந்த ஒன்பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசானில் தளத்தில் ஆர்டர் செய்தால் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.36,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

SALE அதிருது.. ரூ.3000 விலை குறைப்பு.. அடிச்சு புடிச்சு ஆர்டர்.. போன்?

இந்த ரூ.3000 டிஸ்கவுண்ட் பெறுவதற்கு எச்டிஎப்சி கிரெடிட் கார்டு அல்லது ஆக்சிஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். அதேபோல ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த சலுகை கொடுக்கப்படுகிறது. ஈஎம்ஐ இல்லாமல், பேங்க் டிஸ்கவுண்ட் வேண்டுமானால், அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம்.

ஆனால், இந்த கார்டுக்கு ரூ.1,200 மட்டுமே உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். மேலும், பேங்க் டிஸ்கவுண்ட் இல்லாமலேயே ரூ.37,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் விலை நல்ல சலுகையாகும். ஏனென்றால், இந்த பிரீமியம் போனின் மார்கெட் விலை மாறாமல் இருக்கிறது. அந்த அளவுக்கு பீச்சர்கள் இருக்கின்றன.

ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள் (OnePlus 12R Specifications): இந்த பிரீமியம் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 8 Gen 2) சிப்செட் வருகிறது.

SALE அதிருது.. ரூ.3000 விலை குறைப்பு.. அடிச்சு புடிச்சு ஆர்டர்.. போன்?

3டி கர்வ்ட் டிசைன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) கொண்ட 6.78 இன்ச் (2780×1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 2160Hz ஃபிரிகொன்சி PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

இந்த ஒன்பிளஸ் 12ஆர் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கிடைக்கிறது.

மேலும், ஓம்னிவிஷன் ஓவி02பி (OV02B) சென்சார் கொண்ட 2 எம்பி மேக்ரோ பேக் செய்துள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டரில் சாம்சங் எஸ்5க3பி9 (Samsung S5K3P9) சென்சார் கிடைக்கிறது. இந்த பிரீமியம் போனில் 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி வருகிறது. கூல் ப்ளூ (Cool Blue) மற்றும் அயர்ன் கிரே (Iron Gray) கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R With 50MP Camera Gets Discount on Amazon Sale Under Rs 37000 Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X