நோ டவுட்.. மார்கெட் காலி.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?
சோனி சென்சார் கேமரா, 3டி டிஸ்பிளே, 100W சார்ஜிங் போன்ற மிரளவிடும் அம்சங்களை கொண்ட ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) போனானது, ஒன்பிளஸ் ஸ்மூத் பியாண்ட் பிலீஃப் நிகழ்வில் (Smooth Beyond Belief Event) பிரம்மாண்டமாக வெளியாகிவிட்டது. இதுகுறித்த விவரம் இதோ.
ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள் (OnePlus 12R Specifications): இந்த போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Octa Core Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. அதோடு ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) சப்போர்ட் வருகிறது. அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.
டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + கொண்ட 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.
16 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது.

இந்த ஒன்பிளஸ் 12ஆர் போனில் 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டிருக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் உள்ளது. அதோடு வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போனில் கூல் ப்ளூ (Cool Blue), அயர்ன் கிரே (Iron Grey) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ப்ரீ-ஆர்டர் இன்று முதல் தொடங்குகிறது. ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அமேசான் (Amazon), ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








