Home
Mobile

இத எதிர்பார்க்கல.. இவ்ளோ கம்மி விலையில்.. இவ்ளோ UPGRADES-ஆ.. வாய் பிளக்க வைக்கும் புதிய OnePlus போன்!

குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் சிப்செட் ஆக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 Chipset) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சிப்செட்டை பயன்படுத்தும் முதல் சில ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்பிளஸ் நிறுவனமும் அடங்கும்.

கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பேக் செய்யப்படும் என்பது "கிட்டத்தட்ட" உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை பற்றிய சில தகவல்களும் வெளியாகி உள்ளன. அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? எப்போது, என்ன விலைக்கு அறிமுகமாகும்?

வாய் பிளக்க வைக்கும் புதிய OnePlus போன்!

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி (OnePlus 12R 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். பெயர் குறிப்பிடுவது போலவே இது ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G) ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆக இருக்கும். ஒரு புதிய அறிக்கையின்படி, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்பை (Snapdragon 8 Gen 2 Chipset) பேக் செய்யும்.

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டிற்கு (Snapdragon 8 Plus Gen 1Chipset) பதிலாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டை சேர்ப்பது (பழைய ஒன்பிளஸ் 11ஆர் உடன் ஒப்பிடும் போது) ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். ஏனென்றால் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 உடன் ஒன்பிளஸ் 12ஆர் ஆனது ஆனது மேம்பட்ட சிபியு (Improved CPU) மற்றும் கேமிங் செயல்திறனை (Gaming Performance) கொண்டிருக்கும், அதே நேரத்தில் அதிக பேட்டரி லைஃப்பையும் (Improved Battery Life) அதிகரிக்கும்.

வாய் பிளக்க வைக்கும் புதிய OnePlus போன்!

கேமராக்களில் எதிர்பார்க்கும் மேம்பாடுகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவானது (2MP Macro Camera), 2எக்ஸ் ஜூமிங் திறன் கொண்ட 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா சென்சார் (32MP Telephoto Camera Sensor) ஆக அப்கிரேட் ஆகலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் ப்ரைட்னஸில் (Brightness) பெரிய முன்னேற்றத்தை காண்போம். ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸை (3000 Nits Peak Brightness) எதிர்பார்க்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனில் 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை கொண்டுள்ளது.

வாய் பிளக்க வைக்கும் புதிய OnePlus போன்!

கடைசியாக ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 5500எம்ஏஎச் பேட்டரி (5500mAh Battery) உடன் வரலாம். முன்னரே குறிப்பிட்டபடி இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் வரும் என்பதால், இதில் நிச்சயம் அதிகரிக்கப்பட்ட பேட்டரி லைஃப்பை எதிர்பார்க்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11ஆர் மாடலில் 100வாட் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு (100W Fast Charging Support) உடனான 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

சுவாரஸ்யமாக, நாம் மேற்கண்ட ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எல்லாமே ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) ஸ்மார்ட்போனின் லீக்டு அம்சங்களுடன் (Leaked Specifications) ஒத்துப்போகின்றன. இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற விவரங்கள் இன்னும் பகிரப்படவில்லை. இருப்பினும் இவைகள் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாய் பிளக்க வைக்கும் புதிய OnePlus போன்!

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் ரூ.39,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ஒன்பிளஸின் 2024 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை, இது ரூ.80,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இது 16 ஜிபி வரையிலான ரேம், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான புதிய ஆக்சிஜென்ஓஎஸ் 14, 1டிபி வரையிலான யூஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ், 6.82-இன்ச் ஓஎல்இடி பிஓஇ எக்ஸ்1டிஸ்பிளே, 50எம்பி + 48எம்பி + 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 32எம்பி செல்பீ, 100வாட் வயர்டு சார்ஜிங் மற்றும் 50வாட் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5400ம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்கள் இடம்பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R to get Bigger Updates Compare to OnePlus 11R 5G Expected Launch Date Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X