Home
Mobile

மிரள போகும் இந்தியா.. பட்ஜெட்டில் OnePlus 12R.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5G எல்லாமே குறைந்த விலையில்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சாதனத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது. நிறுவனம் பட்ஜெட் செக்மென்ட் கீழ் ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) என்று சாதனத்தையும் அறிமுகம் செய்யவிருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 11 சீரிஸ் வரிசையில் ஒனபிளஸ் 11 (OnePlus 11) மற்றும் ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) என்ற இரண்டு சாதனங்களை அறிமுகம் செய்தது. இதில் ஒன்று பிரீமியம் பிளாக்ஷிப் மாடலாகவும், மற்றொன்று பட்ஜெட் பிரியர்களை கவர் செய்யும் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போனாகவும் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரள போகும் இந்தியா.. பட்ஜெட்டில் OnePlus 12R.. AMOLED டிஸ்பிளே..

இதே போக்கை ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 12 சீரிஸ் வரிசையிலும் பின்பற்றவுள்ளது போல் தெரிகிறது. காரணம், சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவலின் படி, IMDA சான்றிதழ் தளத்தில் ஒன்பிளஸ் 12R என்ற சாதனம் இடம்பெற்றுள்ளதை புகைப்பட விபரங்கள் தெளிவாக காண்பித்துள்ளது. இதுவரை ஒன்பிளஸ் நிறுவனம் வெறும் ஒன்பிளஸ் 12 சாதனத்தை மட்டுமே அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வந்தது.

ஒன்பிளஸ் 12R (OnePlus 12R):

ஆனால், IMDA சான்றிதழ் தள தகவல்கள் பட்ஜெட் விலையில் டவுன் டோன் செய்யப்பட்ட மற்றொரு ஒன்பிளஸ் 12 சீரிஸ் சாதனம் வருவதை உறுதி செய்துள்ளது. IMDA தளத்தில் காணப்பட்ட ஒன்பிளஸ் 12R மாடல் 'CPH2609' என்ற மாடல் என்னுடன் காணப்பட்டுள்ளது. இது வைஃபை (WiFi), 5ஜி (5G), ப்ளூடூத் (Bluetooth), என்எஃப்சி (NFC) போன்ற முக்கியமான இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது என்பதை பட்டியல் விபரம் காண்பிக்கிறது.

சமீபத்திய மற்றொரு லீக் தகவல் வெளியிட்டுள்ள படி, ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் ஜனவரி 23 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேதி ஒன்பிளஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், டிப்ஸ்டர் தகவலின் படி, இந்த சாதனம் ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) இன் விவரக்குறிப்புகள் பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இருப்பினும், இது ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) சாதனத்தின் மறுபெயரிடப்பட்ட மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த சாதனத்தின் வடிவமைப்பு ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) ஒத்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், சில மேம்படுத்தல்களுடன் வரும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 12R எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் (OnePlus 12R Expected Specifications):

இந்த வரவிருக்கும் ஒன்பிளஸ் 12R சாதனம் அதன் ஹூட்டின் கீழ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட்டை பேக் செய்யுமென்று கூறப்படுகிறது. அதேபோல், இது புதிய ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஸ் 14 (OxygenOS 14) உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இது 1.5K தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் கூடிய 6.7' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 50MP OIS ஆதரவுடன் கூட பரிமாறி கேமரா சென்சார், 8MP அல்ட்ராவைட் சென்சார் மற்றும் 32MP டெலிஃபோட்டோ சென்சார் ஆகிய ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டிருக்கும். இது 16MP முன் கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5400mAh பேட்டரியை ரவுண்டிங் ஆஃப் செய்கிறது. ஒன்பிளஸ் 12 (OnePlus 12) வரும் டிசம்பர் 5ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதை நாம் அறிவோம். இந்த போனின் அறிமுகத்திற்கு முன்பாக ஒன்பிளஸ் 12R தகவல் வெளியாகி பட்ஜெட் பிரியர்களை குஷியடைய செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R spotted on IMDA certification site before launch of OnePlus 12 In India with AMOLED display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X