அடிச்சு புடிச்சு ஆர்டர்.. மொத்த சேல் காலி.. அடுத்து எப்போ? மரண வெயிட்டிங்கில் ஒன்பிளஸ் பிரியர்கள்.. எந்த போன்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) போனின் விற்பனை மிரளவிட்டுள்ளது. விற்பனைக்கு வந்த ஒரு சில மணி நேரங்களில் விற்று தீர்ந்துள்ளது. இவ்வளவு பெரிய வரவேற்பு பெற அந்த போனில் என்ன இருக்கிறது? அடுத்த விற்பனை எப்போது தொடங்குகிறது?
இந்த போனின் விலை எப்படி? போன்ற அனைத்து விவரங்களையும் இப்போது பார்ப்போம். இந்தியாவில் ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு அடுத்தபடியாக பக்கா பிராண்ட் என்ற பெயரை எடுத்து விட்டது. ஏனென்றால், அந்த போன்களில் வரும் கேமரா மற்றும் அல்ட்ரா பிரீமியம் டிசைன் அந்தளவிற்கு இருக்கும். இதுவே ஒன்பிளஸ் 12ஆர் போனுக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்துள்ளது.

ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள் (OnePlus 12R Specifications): இந்த போனில் 6.78 இன்ச் (2780×1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz ஃபிரிகொன்சி PWM டிம்மிங், 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm Mobile) சிப்செட் வருகிறது.
அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் வருகிறது.

அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் வருகிறது. 2 எம்பி மேக்ரோ ஓவி02பி (OV02B) சென்சாருடன் வருகிறது. சாம்சங் எஸ்5க3பி9 (Samsung S5K3P9) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 5500mAh பேட்டரி கொண்டிருக்கிறது. 100W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் வருகிறது.
இந்த ஒன்பிளஸ் 12ஆர் போனில் கூல் ப்ளூ (Cool Blue) மற்றும் அயர்ன் கிரே (Iron Gray) ஆகிய கலர்கள் வருகின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆக இருக்கிறது.
இந்த ஒன்பிளஸ் 12ஆர் போனானது, ஜனவரி 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனையானது, அமேசான் (Amazon) மற்றும் ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் (OnePlus Online Store) ஆகியவற்றில் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட்டுடன் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கியது. மிகப்பெரும் வரவேற்பு பெற்றிருந்தால், ஒரு சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தது.
இதனால், பெரும்பாலான ஒன்பிளர் பிரியர்கள் அந்த போனின் அடுத்த விற்பனை எப்போது தொடங்கும் என்று காத்திருக்கின்றனர். இவர்களுக்காகவே வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அடுத்த விற்பனை தொடங்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த விற்பனையிலும், இந்த போன் சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








