Home
Mobile

ஆர்டர் தூள் பறக்க போகுது.. 100W சார்ஜிங்.. சோனி கேமரா.. தரமான OnePlus போனுக்கு ரூ.2000 தள்ளுபடி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 100று சார்ஜிங், 50எம்பி பிரைமரி கேமரா, அமோலெட் டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

குறிப்பாக அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரூ.39,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனுக்கு ரூ.2000 கூப்பன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை தற்போது ரூ.37998 விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டர் தூள் பறக்க போகுது.. தரமான OnePlus போனுக்கு ரூ.2000 தள்ளுபடி..

ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள் (OnePlus 12R Specifications): இந்த ஒன்பிளஸ் 12ஆர் போன் 6.78 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2780 × 1264 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி(Octa Core Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வசதியுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12ஆர் போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. அதேபோல் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12ஆர் போன்.

அதேபோல் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் ஒன்பிளஸ் 12ஆர் போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த ரியர் கேமராக்கள் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது.

ஆர்டர் தூள் பறக்க போகுது.. தரமான OnePlus போனுக்கு ரூ.2000 தள்ளுபடி..

குறிப்பாக 5500mAh பேட்டரி, 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், டைப்-சி சார்ஜிங் போர்ட், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

இந்த ஒன்பிளஸ் 12ஆர் போன் கூல் ப்ளூ (Cool Blue), அயர்ன் கிரே (Iron Grey) நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
OnePlus 12R smartphone in India gets Rs.2000 discount: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X