Home
Mobile

செம்ம டிமாண்ட்.. ஆர்டர் தெறிக்குது.. எப்போதும் இல்லாத Lowest Price-ல் விற்கப்படும் லேட்டஸ்ட் OnePlus போன்!

ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருக்கிறது. சரியான தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, எப்படி பார்த்தாலும் இது ஜனவரி 2025 இல் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் (OnePlus Community Sale) என்கிற சிறப்பு விற்பனை நடக்கிறது.

இந்த விற்பனையில் பல வகையான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அபாரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் (Discounts and Offers) கிடைக்கிறது. குறிப்பாக ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போன் ஆனது முன் எப்போதும் இல்லாத மிகவும் குறைவான (Lowest Price Ever) விற்பனை செய்யப்படுகிறது.

எப்போதும் இல்லாத Lowest Price-ல் விற்கப்படும் லேட்டஸ்ட் OnePlus போன்!

தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.42,000 க்கு பதிலாக ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ரூ.6000 டிஸ்கவுன்ட்டில் ரூ.3000 நேரடி தள்ளுபடியாகும், மீதமுள்ள ரூ.3000 டிஸ்கவுண்ட் ஆனது பேங்க் கேஷ்பேக் ஆபர் ஆகும்.

ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்-ன் கீழ் ஒன்பிளஸ் 12ஆர் தவிர்த்து வேறு சில ஒன்பிளஸ் மாடல்களின் மீதும் நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் ஆனது பேங்க் ஆபருடன் சேர்த்து ரூ.51,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போன் ஆனது பேங்க் ஆபருடன் சேர்த்து ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போன் ஆனது பேங்க் ஆபருடன் சேர்த்து ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite) ஸ்மார்ட்போன் ஆனது பேங்க் ஆபருடன் சேர்த்து ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஆபர் விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 1.5கே ரெசல்யூஷன், எல்டிபிஓ தொழில்நுட்பத்துடன் கூடிய 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உடனான 6.78-இன்ச் அமோஎல்இடி ப்ரோ எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை (AMOLED Pro XDR Display) கொண்டுள்ளது

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 Chipset) மூலம் இயக்கப்படும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி (5G Connectivity), இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் நீர் - தூசி எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும் (IP54 Rating) கொண்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாக போகும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82-இன்ச் 2கே+ எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் அங்கிள் உடனான 50எம்பி கேமரா + 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ள ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 + IP69 ரேட்டிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4-மைக்ரோஃபோன்கள் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R Selling At Lowest Ever Price Rs 36999 in Amazon Offer Ends December 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X