இப்போ ரூ.5500 கம்மி! OnePlus 12-ஐ தொடர்ந்து OnePlus 12R மீதும் விலை குறைப்பு.. எல்லாம் OnePlus 13R வர்ற நேரம்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் 2025 ஜனவரி 7 ஆம் தேதியன்று 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. அவைகள் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடல்கள் ஆகும். இந்நிலைபாட்டில் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மாடலின் மீது அபார தள்ளுபடியை அறிவித்து, அதை ஆபர் விலையின் கீழ் விற்பனை செய்து வருகிறது.
தற்போது அதே பிளிப்கார்ட் வலைதளத்தில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனும் ஆபர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் , ஐயர்ன் க்ரே (Iron Grey) ஆப்ஷன் ஆனது, அசல் அறிமுக விலையான ரூ.42,999க்கு பதிலாக 12% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.37,499 க்கு வாங்க கிடைக்கிறது.

அதாவது மேற்குறிப்பிட்டுள்ள ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் வேரியண்ட் மீது ரூ.5,500 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் (Flipkart Axis) வங்கி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5% கேஷ்பேக் சலுகை மற்றும் மாதம் ரூ.1,866 முதல் தொடங்கும் இஎம்ஐ விருப்பங்களையும் அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது எல்டிபிஓ தொழில்நுட்பம் , 1.5கே ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உடனான 6.78-இன்ச் அமோஎல்இடி ப்ரோ எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை (AMOLED Pro XDR Display) கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி (5G Connectivity), இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் நீர் - தூசி எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும் (IP54 Rating) கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 12 மீதான தள்ளுபடியை பொறுத்தவரை, தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் , க்ளேஷியல் ஒயிட் (Glacial White) ஆப்ஷன் ஆனது, அசல் அறிமுக விளையான ரூ.64,999க்கு பதிலாக 18% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.53,057 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இந்த வேரியண்ட் மீது ரூ.11,942 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது.
ஜனவரி 7 அறிமுகமாகும் ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் விலை நிர்ணயம் (Price Range) எப்படி இருக்கும்? ஒன்பிளஸ் 13-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.67,000 முதல் ரூ.70,000 க்குள் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ .45,000 - ரூ.50,000 க்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் அறிமுக நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்வது எப்படி? ஒன்பிளஸ் நிறுவனத்தின் சம்மர் லான்ச் இவென்ட் ஆனது ஜனவரி 7, 2025 அன்று உலகளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வையும், ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டையும் நேரலையில் பார்க்க விரும்புபவர்கள், இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஒன்பிளஸ்-ன் அதிகாரப்பூர்வ இணையதளம், யூட்யூப் சேனல் மற்றும் சமூக ஊடக தளங்களை அணுகலாம்.


Click it and Unblock the Notifications








