மளமளவென குறைந்த OnePlus 5ஜி போன் விலை.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் Black Friday sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே, சோனி கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் முன்பு ரூ.39,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனுக்கு அமேசான் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.35,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 உடனடி தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.32,999 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள் (OnePlus 12R Specifications): தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி(Octa Core Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வசதியுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12ஆர் போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. அதேபோல் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக 6.78 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே உடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2780 × 1264 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் ஒன்பிளஸ் 12ஆர் போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ரியர் கேமராக்கள் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் மாடல்.

ஒன்பிளஸ் 12ஆர் போனில் 5500mAh பேட்டரி, 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், டைப்-சி சார்ஜிங் போர்ட், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. கூல் ப்ளூ (Cool Blue), அயர்ன் கிரே (Iron Grey) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications







