Home
Mobile

OnePlus 12 கிடக்குது! அதை விட கம்மி விலைக்கு 120Hz டிஸ்பிளே, 100W சார்ஜிங், 16GB ரேம், 50MP கேமரா! என்ன மாடல்?

என்னது அறிமுகமான சில தினங்களில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை ஓரங்கட்டும் விலையில்.. கிட்டத்தட்ட அதே அம்சங்களுடன்.. இன்னொரு போனா? என்று ஷாக் ஆகிவிட்டர்கள் என்றால்.. உங்களுக்கு இன்னொரு ஷாக்! ஒன்பிளஸ் 12-க்கு போட்டியாக களமிறங்குவது இன்னொரு ஒன்பிளஸ் மாடல் ஆகும்!

அதென்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? மிட்-ரேன்ஜ் (Mid-range) விலையில் வரும் இந்த ஸ்மார்ட்போன் எப்படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் (Flagship) ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12-க்கு போட்டியாக இருக்கும்? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ:

OnePlus 12-ஐ விட கம்மி விலைக்கு 120Hz டிஸ்பிளே, 100W சார்ஜிங்!

ஒன்பிளஸ் 12-க்கு போட்டியாக வருவது என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஒன்பிளஸ் 12 மாடலை தொடர்ந்து, சீன சந்தையில் ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) ஸ்மார்ட்போனும் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறியாதோர்க்ளுக்கு சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஆக அறிமுகமாகும் மாடல் தான் இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் ஆக அறிமுகமாகும். இது வருகிற 2024 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 12 உடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படலாம் என்கிற யூகங்கள் உள்ளன. இந்நிலைப்பாட்டில் ஒன்பிளஸ் 12ஆர் என்னென்ன அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

OnePlus 12-ஐ விட கம்மி விலைக்கு 120Hz டிஸ்பிளே, 100W சார்ஜிங்!

சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒன்பிளஸ் 12ஆர் ஆனது சில முக்கிய அம்சங்களை ஒன்பிளஸ் 12 மாடலில் இருந்து கடன் வாங்கி கொள்ளும் என்பது போல் தெரிகிறது. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் பிஇஓ எக்ஸ்1 கர்வ்டு டிஸ்பிளேவை பேக் செய்யும்.

மேலும் ஒன்பிளஸ் ஏஸ் 3 டிஸ்பிளேவின் பீக் ப்ரைட்னஸ் லெவல் மற்றும் PWM டிம்மிங் ரேட் ஆனது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் இருப்பதை போலவே இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் 1440 x 3168 பிக்சல்ஸ், LTPO OLED பேனல், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ரேட் உடனான 6.82-இன்ச் குவாட்-எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

OnePlus 12-ஐ விட கம்மி விலைக்கு 120Hz டிஸ்பிளே, 100W சார்ஜிங்!

மேலும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை பேக் செய்ய வாய்ப்புள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் 100W SuperVOOC, 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5400mAh பேட்டரியை கொண்டுள்ளது.

டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் மெட்டல் மிட்-ஃபிரேம் சேஸை பெறும் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படலாம். ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை (Snapdragon 8 Gen 3 SoC) கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இந்த போனில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் + அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 8-மெகாபிக்சல் சென்சார் + 32-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிலும் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஓஐஎஸ் உடனான 50எம்பி சோனி LYT-808 மெயின் கேமரா + 48எம்பி சோனி IMX581 அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 3x டெலிஃபோட்டோ ஜூம் கொண்ட 64எம்பி OV64B பெரிஸ்கோப் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி சோனி IMX615 செல்பீ கேமரா உள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 3 (அல்லது) ஒன்பிளஸ் 12ஆர் எப்படி ஒன்பிளஸ் 12-க்கு போட்டியாக இருக்கும்? இதற்கு விலை தான் முக்கிய காரணமாக இருக்கும். ஒன்பிளஸ் 12ஆர் ரூ.40000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12-ன் இந்திய விலை நிர்ணயம் ரூ.60000-ஐ சுற்றி இருக்கும் என்பது போல் தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R OnePlus Ace 3 Launch Soon Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X