Home
Mobile

புது வேரியண்ட்.. 8ஜிபி ரேம்.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் 12ஆர் போனின் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது தற்போது ஒன்பிளஸ் 12ஆர் போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 8ஜிபி ரேம் + 128ஜிபிமெமரி மற்றும் 16ஜிபி ரேம்+ 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது தான் புதிய வேரிண்ட் கொண்டுவரப்பட்டுள்ளது.

புது வேரியண்ட்..  8ஜிபி ரேம்.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. எந்த போன்?

அதேபோல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 12ஆர் போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.42,999-ஆக உள்ளது. இந்த புதிய வேரியண்ட் இன்று (மார்ச் 21) மதியம் 12 மணி அளவில் ஒன்பிளஸ் ஸ்டோர் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி உள்ளது. இதுதவிர எக்ஸ்சேஞ்ச் சலுகை கூட உள்ளது.

ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள் (OnePlus 12R Specifications): 6.78 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED)டிஸ்பிளே உடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன்டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2780 × 1264 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி(Octa Core Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வசதியுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12ஆர் போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. அதேபோல் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12ஆர் போன்.

சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் ஒன்பிளஸ் 12ஆர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ரியர் கேமராக்கள் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது.

புது வேரியண்ட்..  8ஜிபி ரேம்.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. எந்த போன்?

5500mAh பேட்டரி, 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், டைப்-சி சார்ஜிங் போர்ட், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

கூல் ப்ளூ (Cool Blue), அயர்ன் கிரே (Iron Grey) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R New 8GB RAM and 256GB variant launched in India: check Price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X