இதோ வந்துட்டேன்.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. 512GB மெமரி.. களமிறங்கும் புதிய OnePlus போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் ஏஸ் 3 எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 போன் ஆனது உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 12ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் 12ஆர் போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.
ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள் (OnePlus 12R Specifications): 6.7-இன்ச 1.5கே BOE X1 8T LTPO கர்வ்ட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2,780 x 1,264 பிக்சல்ஸ், 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ( Snapdragon 8 Gen 2 ) சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் Oxygen OS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் போன் வெளிவரும்.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் 12ஆர் போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 32எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மாரட்போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
5500எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 100 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக பிங்க், கிரே, ப்ளூ நிறங்களில் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 (ஒன்பிளஸ் 12ஆர்) போன் ஆனது வரும் டிசம்பர் 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வரும் ஜனவரி 23-ம் தேதி ஒன்பிளஸ் 12ஆர் போன் ஆனது இந்திய சந்தை மற்றும் உலக சந்தைகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று ஆன்லைனில் தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








