அவசரப்பட்டு.. சாதாரண OnePlus 12R-ஐ வாங்கிடாதீங்க.. இந்த Special Edition-ஐ வாங்குங்க! இதுல அப்படி என்ன ஸ்பெஷல்?
சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஸ்மூத் பியோண்ட் பிலீஃப் நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸை (Flagship smartphone series) அறிமுகப்படுத்தியது. இந்த சீரீஸின்கீழ் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) அறிமுகமாகின.
ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12ஆர் உடன் சேர்த்து ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸும் அறிமுகமானது. இதில் ஒன்பிளஸ் 12 ஆனது ஜனவரி 30 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஒன்பிளஸ் 12ஆர் மாடலானது பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

"ரெகுலர்" (Regular) ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிய பிறகு ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் :ஸ்பெஷல் எடிஷன்" (Special Edition) ஒன்று உலகளவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன எடிஷன்? அது சரியாக எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
என்ன எடிஷன்? எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் ஜென்ஷின் இம்பாக்ட் எடிஷன் (OnePlus 12R Genshin Impact edition) வருகிற 2024 பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஆக அறிமுகமானதால் அங்கே இந்த ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஜென்ஷின் இம்பாக்ட் எடிஷன் (OnePlus Ace 3 Genshin Impact Edition) என்கிற பெயரின் கீழ் வெளியாகும்.
இந்த ஸ்பெஷல் எடிஷனில் அப்படி என்ன ஸ்பெஷல்? ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் ஜென்ஷின் இம்பாக்ட் எடிஷன் ஆனது ஜென்ஷின் இம்பாக்ட்டின் பிளேயபிள் கேரக்டரில் ஒன்றான கெகிங்கின் தீமை (Keqing Theme) கொண்டுருக்கும். இந்த ஸ்பெஷல் எடிஷன் ஒரு எலக்ட்ரோ வயலட் கலரையும் கொண்டிருக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன், குறிப்பிட்ட கேமின் தனித்துவமான வடிவமைப்பு கூறுகள் (Unique design elements) மற்றும் அதற்கு உகந்த கேமிங் அனுபவத்திற்காக (Optimised gaming experience) வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் (Software enhancements) ஆகியவைகளையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாஃப்ட்வேர் மேம்படுத்தல் மற்றும் வித்தியாசமான தோற்றம் தவிர, மற்ற எலலா அம்சங்களும் ரெகுலர் ஒன்பிளஸ் 12ஆர் உடன் ஒற்றுப்போகும். விலை பற்றி எந்த தகவல்களும் இல்லை!
ஏற்கனவே முன்பதிவு செய்ய கிடைக்கும் ரெகுலர் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது அயர்ன் கிரே மற்றும் கூல் ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.45,999 க்கும் வாங்க கிடைக்கும்.
ரெகுலர் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் அமோஎல்இடி ப்ரோ எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 1.5கே ரெசல்யூஷனை ஆதரிக்கிறது, எல்டிபிஓ தொழில்நுட்பத்துடன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பையும் பெற்றுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஐபி64 ரேடிங்கையும் ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications








