நினைச்சத விட கம்மி விலை.. ProXDR டிஸ்பிளே, 100W சார்ஜிங், 5500mAh பேட்டரி.. OnePlus 12R ஆர்டர் அதிர போகுது!
2024 ஆம் ஆண்டில் இந்தியர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சில மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மாடலும் ஒன்றாகும். சீனவில் இது ஜன.4 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் ஏஸ் 3 என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகி, பின்னர் ஜன.23-ல் ஒன்பிளஸ் 12ஆர் ஆக இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
அதே நாளில் தான் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகிவிட்ட ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனும் கூட இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஒன்பிளஸ் 12ஆர் என்ன விலைக்கு அறிமுகமாகும்? ஒன்பிளஸ் 12 5ஜி-யின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இவ்விரு ஸ்மார்ட்போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள்: உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, இது மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், நான்கு வருட செக்யூரிட்டி புதுப்பிப்புகளையும் பெறும். இந்த போனின் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் உடன் வரும். மேலும் இது வைஃபை 7, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் என்எப்சி கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆதரிக்கும்.
ஒன்பிளஸ் 12ஆர்-ன் லேட்டஸ்ட் டீஸர் புகைப்படமானது, இது மிகவும் மெல்லிய பெஸல்களை கொண்டிருக்கும் என்பதைக் காட்டுகிறது. டிஸ்பிளேவின் பக்கவாட்டில் உள்ள பெஸல்கள் 1.36 மிமீ ஆகவும், கன்னப்பகுதி 1.94 மிமீ ஆகவும் இருக்கும். இதன் டிஸ்பிளே 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் போன்றவைகளை ஆதரிக்கும்.

ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 1.5கே, 2780 x 1264 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் BOE ஓரியண்டல் டிஸ்பிளே இடம்பெறும் என்பது ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இது 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், ஆட்டோ மோட்-ல் 1,600 நிட்ஸ் ப்ரைட்னஸை வழங்கும் என்று கூறப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும். கேமராக்களை பொறுத்தவரை, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் + அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 8-மெகாபிக்சல்
கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை பேக் செய்யும் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் (black), ப்ளூ (blue) மற்றும் கோல்ட் (gold) என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும்.
ஒன்பிளஸ் 12ஆர் இந்திய விலை: பெரும்பாலும் இது ரூ.40,000 முதல் ரூ.42,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.39,999 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.44,999 க்கும் அறிமுகமானது.
ஒன்பிளஸ் 12 5ஜி இந்திய விலை: இந்தியாவில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் விலை ரூ.59,999 முதல் ரூ.62,999 வரைக்குள் எங்காவது ஒரு புள்ளியில் இருக்கலாம். மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.64,999 முதல் ரூ.67,999 வரைக்குள் இருக்கும்.
ஒன்பிளஸ் 12 5ஜி முக்கிய அம்சங்கள்: 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் க்யூஎச்டி பிளஸ் 2கே ஓஎல்இடி எல்டிபிஓ டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் 24ஜிபி வரையிலான LPDDR5X ரேம், 1 டிபி வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி சோனி LYT-808 மெயின் கேமரா + 48எம்பி சோனி IMX581 அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 3எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் கொண்ட 64எம்பி OV64B பெரிஸ்கோப் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி சோனி IMX615 செல்பீ கேமரா உள்ளது.
மேலும் இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,400mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது ஒப்போவின் சூப்பர்வூக் எஸ் பவர் மேனேஜ்மென்ட் சிப் உடன் பொருத்தப்பட்டுள்ளது. கடைசியாக இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








