Home
Mobile

வாடா செல்லம்.. உனக்கு தான் வெயிட்டிங்.. மிட்-ரேன்ஜ் விலையில் புது OnePlus போன்.. என்ன மாடல்?

கடந்த டிச.5 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்ட்போன் வருகிற ஜனவரிமாதத்தில் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதனுடன் சேர்த்து இன்னொரு புதிய ஒன்பிளஸ் மாடலும் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

ஓஐஎஸ் ஆதரவு உடனான மெயின் கேமரா, 100W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் உடனான 5500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் புதிய ஒன்பிளஸ் மாடலின் பெயர் என்ன? அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அது என்னன்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

வாடா செல்லம்.. மிட்-ரேன்ஜ் விலையில் புது OnePlus போன்!

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்தியாவில் இது ஒன்பிளஸ் 12ஆர் என்கிற பெயரின் கீழ் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. இந்த யூகத்தை உறுதிப்படுத்தும்படி ஒன்பிளஸ் 12ஆர்-ன் அனைத்து அம்சங்களும் லீக் ஆகியுள்ளன.

என்னென்ன அம்சங்கள்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) பகிர்ந்த தகவலின்படி - கடந்த சில தினங்களாக வெளியான லீக்ஸ்படி - ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 32-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா (32MP Telephoto Camera) இடம்பெறாது.

வாடா செல்லம்.. மிட்-ரேன்ஜ் விலையில் புது OnePlus போன்!

ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் முன் மற்றும் பின்பக்க கேமரா செட்டப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஆனது 6.78-இன்ச் BOE X1 ஓரியண்டல் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 1.5கே (2,780 x 1,264 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன், 1,600 நிட்ஸ் க்ளோபல் பீக் ப்ரைட்னஸ், 4,500 நிட்ஸ் லோக்கல் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 2,160Hz PWM மடிம்மிங் ரேட் போன்றவைகளை கொண்டிருக்கும்.

வாடா செல்லம்.. மிட்-ரேன்ஜ் விலையில் புது OnePlus போன்!

ஒன்பிளஸ் 12ஆர் ஆனது மெட்டாலிக் மிடில் ஃப்ரேமுடன் கிளாஸ் பாடியை கொண்டிருக்கக்கூடும். ப்ளூ, க்ரே மற்றும் கோல்ட் கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். கடைசியாக இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

என்ன விலைக்கு வரும்? ஒன்பிளஸ் ஏஸ்2 (OnePlus Ace 2) ஆக சீனாவில் அறிமுகமான மாடல் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) ஆக அறிமுகமானது. இந்தியாவில் ஒன்பிளஸ் 11ஆர்-ன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.39,999 க்கும் ரூ.44,999 க்கும் அறிமுகமாகின.

இதேபோன்ற விலை நிர்ணயத்தை நாம் ஒன்பிளஸ் 12ஆர் மாடலிலும் எதிர்பார்க்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி இது ஒன்பிளஸின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12 உடன் சேர்ந்து அல்லது சில வார இடைவெளியில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12 இந்திய அறிமுகம் ஜனவரி 23இல் நடக்க உள்ளது.

ஒன்பிளஸ் 12 விலை? சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.50,600 க்கு அறிமுகமாகி உள்ளது. இதே ஸ்மார்ட்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.56,500 க்கு வெளியாகியுள்ளது.

அடுத்ததாக உள்ள 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.62,400 க்கும், கடைசியாக உள்ள ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் ரூ.68,200 க்கும் அறிமுகமாகியுள்ளது. இந்த 4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் எதெல்லாம் இந்திய சந்தைக்கு வரும் என்பது தொடர்பான தகவல்கள் இல்லை. இருப்பினும் சீனாவில் அறிமுகமான க்ரீன், பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R Coming Without 32MP Telephoto Camera Full Specifications Leaked Again
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X