Home
Mobile

அடிமட்ட விலையில் OnePlus போன்.. 120Hz டிஸ்பிளே, 16GB ரேம், 5500mAh பேட்டரி, 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது, இந்தியாவில் தனது முதல் பிளாக் ஃப்ரைடே விற்பனையை (Black Friday Sale) நடத்துகிறது. டிசம்பர் 2 ஆம் தேதி வரை நடக்கும் இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கேமிங் கன்சோல்கள், ஃபேஷன் போன்ற பலதரப்பட்ட பொருட்களின் மீது அபாரமான தள்ளுபடிகள் கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் நல்ல ஆபர் விலையில், ஒரு லேட்டஸ்ட் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால்.. அமேசான் பிளாக் ஃப்ரைட் விற்பனை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். ஏனென்றால், தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி (OnePlus 12R 5G) ஸ்மார்ட்போன் மீது ரூ.5000 வரையிலான நேரடி தள்ளுபடி, ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் என மொத்தம் 3 சலுகைகள் கிடைக்கிறது.

அடிமட்ட விலையில் OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அசல் விலையும், நேரடி தள்ளுபடிக்கு பிறகான விலைகளின் விவரம்:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்: அசல் விலை ரூ.39,999, இப்போது ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கிறது
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்: அசல் விலை ரூ.42,999, இப்போது ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது
16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்: அசல் விலை ரூ.45,999, இப்போது ரூ.40,999 க்கு வாங்க கிடைக்கிறது

ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் மீதான பேங்க் டிஸ்கவுண்ட் (Bank Discount) விவரங்கள்: ஒன்கார்டு (OneCard), பெடரல் பேங்க் (Federal Bank) மற்றும் ஆர்பிஎல் (RBL) பேங்க் கிரெடிட் கார்டுகளில் ரூ.3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் நான்-இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ஃபெடரல் பேங்க் டெபிட் கார்டுகளில் ரூ.3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மேற்கண்ட ஆபர்களை பயன்படுத்திய பின்னர் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.32,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.35,99 க்கும், கடைசியாக 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ 37,999 க்கும் வாங்க கிடைக்கும்.

இதுதவிர்த்து அமேசான் இந்தியா வலைத்தளமானது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் மீதான எக்ஸ்சேன்ஜ் சலுகையையும் (Exchange Offer) வழங்குகிறது. இதன்கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் ஒன்பிளஸ் 12ஆர் மாடலின் இறுதி விலையை மேலும் குறைக்கலாம். நீங்கள் கொடுக்கும் பழைய ஸ்மார்ட்போனின் நிலையை பொறுத்து அதற்கான டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது 1.5கே ரெசல்யூஷன், எல்டிபிஓ தொழில்நுட்பத்துடன் கூடிய 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உடனான 6.78-இன்ச் அமோஎல்இடி ப்ரோ எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை (AMOLED Pro XDR Display) கொண்டுள்ளது

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Quallcomm Snapdragon 8 Gen 2 Chipset) மூலம் இயக்கப்படும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி (5G Connectivity), இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் நீர் - தூசி எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும் (IP54 Rating) கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R At Unbelievable Discount Price Rs 32999 in Amazon Black Friday Sale Ends December 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X