Home
Mobile

அமேசான் அதிர போகுது.. 50MP கேமரா.. 256GB மெமரி.. ஜன.23-ல் இந்தியாவுக்கு வரும் OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஒன்பிளஸ் 12ஆர் போன் ஆனது இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அமேசான் அதிர போகுது.. ஜன.23-ல் இந்தியாவுக்கு வரும் OnePlus போன்..

ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள்(OnePlus 12R specifications): 6.78-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஒ AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12ஆர் மாடல். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) டால்பி விஷன் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 chipset) வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். பின்பு அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு, , 9140mm² VC கூலிங் சப்போர்ட், உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்கள் இதில் உள்ளது. குறிப்பாக கேமிங் வசதிக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. நீலம், கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இந்த அசத்தலான ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

கலர்ஒஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கொண்டு ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனுக்கு 3 வருடத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் நான்கு வருடங்களுக்குப் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ஒன்பிளஸ் 12ஆர் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக 5500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு 5ஜி, வைஃபை 7, ஐஆர் பிளாஸ்டர், புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

குறிப்பாக ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.30,200 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R Amazon Availability: check launch date, price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X