Home
Mobile

புதுசா மரக்கட்டை டிசைன்.. நினைச்சத விட கம்மி விலை.. OnePlus 12 விற்பனை ஓஹோன்னு இருக்க போகுது!

இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மாடலானது, சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும் என்று (Launch Date) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்.. ஒன்பிளஸ் 12-ஐ பற்றிய சில "எதிர்பார்க்காத" தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி அப்படி என்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? அதை "எதிர்பார்க்காத தகவல்கள்" என்று குறிப்பிட என்ன காரணம்? ஒன்பிளஸ் 12 எந்த தேதியில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? இது என்ன விலைக்கு அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

OnePlus 12 விற்பனை ஓஹோன்னு இருக்க போகுது!

எப்போது அறிமுகம்? ஒன்பிளஸ் நிறுவனம் தனது 10வது ஆண்டு விழாவை வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி சீனாவில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. அதே நிகழ்வில் ஒன்பிளஸ் 12 அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு உள்ளூர் நேரப்படி இரவு 7:00 மணிக்கு (இந்திய நேரடி காலை 4:30 மணிக்கு) நடைபெறும்.

அதாவது ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன் பின்னரே, இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும். ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகமானது (India Launch) வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிகழ அதிக வாய்ப்புள்ளது.

OnePlus 12 விற்பனை ஓஹோன்னு இருக்க போகுது!

இதுவரை ஒன்பிளஸ் 12-இல் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? இது குவால்லாமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 8 Gen 3 SoC) கொண்டு இயங்கும் என்பதும், 2கே ரெசல்யூஷன் உடனான BOE X1 OLED LTPO டிஸ்பிளேவை பேக் செய்யும் என்பதும் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒன்பிளஸ் 12 ஆனது கல்ர்ஓஎஸ் 14 (ColorOS 14) உடன் அனுப்பப்படும் என்பதும், கேமரா செட்டப்பில் சோனி LYTIA LYT808 மெயின் ரியர் கேமரா மற்றும் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை (Periscope Telephoto Camera) உள்ளடக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

OnePlus 12 விற்பனை ஓஹோன்னு இருக்க போகுது!

ஒன்பிளஸ் 12 பற்றி வெளியான அந்த "எதிர்பார்க்காத தகவல்கள்" என்னது? வழக்கமாக ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகவுள்ளது என்றால் அதன் டிஸ்பிளே, கேமரா, ப்ராசஸர் போன்ற அம்சங்களை பற்றிய தகவல்கள் தான் வெளியாகும். ஆனால் சற்றே வித்தியாசமாக ஒன்பிளஸ் 12-ன் பேக் பேனல் பற்றிய சுவாரசியமான தகவலொன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால்.. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது மரக்கட்டை போன்ற பேக் பேனல் அமைப்பை (Wooden Back Texture) கொண்டிருக்கும் என்பதே ஆகும். இது உண்மையான மரமாக இருக்குமா அல்லது மரம் போன்ற அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் அல்லது கிளாஸ் (அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளாக) இருக்குமா என்பதில் தெளிவு இல்லை.

குறைந்தபட்சம் இது வுட் டெக்ஷர் கேஸ் (Wood Texture Case) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த காலத்தில் அதன் சில ஸ்மார்ட்போன்களுக்கு வுட் டெக்ஷர் கேஸ்களை வழங்கியதும், மேலும் அதன் முதல் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஒன் (OnePlus One) மாடலானது வுட் டெக்ஷர் ரிமூவபிள் பேக்கை (Wood texture removable back) கொண்டிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

10வது ஆண்டு விழாவில், தனது முதலில் ஸ்மார்ட்போனில் பயன்படுத்திய பாணியை ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் "வேறு வடிவத்தில்" கொண்டு வருவதே ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோக்கமாக இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் வுட் டெக்ஷர் உடன் வரும் ஒன்பிளஸ் 12 ஆனது ஒரு ஸ்பெஷல் எடிஷனாக (Special Edition) அல்லது லிமிடெட் எடிஷனாக (Limited Edition) கூட இருக்கலாம்.

விலை நிர்ணயம்? ஒன்பிளஸ் 12-ஐ பற்றிய இன்னொரு ""எதிர்பார்க்காத தகவலும்" உள்ளது. அது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலையுடன் தொடர்புடையது. பெரும்பாலும் இது ரூ.80000 பட்ஜெட்டிற்கு அருகில், எங்காவது ஒரு புள்ளியில் அறிமுகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபத்திய தகவலொன்று இது ஒன்பிளஸ் 11-ன் விலையுடன் சிறிதளவே அதிகமாக இருக்கும் என்கிறது.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11-ன் ஆரம்ப விலை ரூ.56,999 ஆகும். ஒருவேளை இந்தியாவில் ஒன்பிளஸ் 12-ன் ஆரம்ப விலை (India Price) இதை விட சிறிதளவு மட்டுமே அதிகமாக இருந்தால்.. தோராயமாக ரூ.60,000 முதல் ரூ.65000 க்குள் இருந்தால், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை (India Sale) தாறுமாறாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!

Best Mobiles in India

English summary
OnePlus 12 Wooden Back Panel Design Launch on December 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X