மார்கெட் காலி.. SONY கேமரா.. 64MP பெரிஸ்கோப்.. QHD டிஸ்பிளே.. 1TB மெமரி.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?
மொத்த மார்கெட்டும் மிரண்டுபோகும் விதமாக 24 ஜிபி ரேம், 1 டிபி மெரி, சோனி கேமரா சென்சார், பெரிஸ்கோப் டெலிபோட்டோ, 100W சார்ஜிங், மெட்டாலிக் பிரேம் போன்ற அதிபிரம்மாண்ட அம்சங்களுடன் ஒன்பிளஸ் 12 போன் வெளியாகிறது. இப்போது டிஸ்பிளேவிலும் பிரம்மாண்டம் காட்டியிருக்கிறது.
இந்த ஒன்பிளஸ் 12 போனில் 2கே எக்ஸ்1 ஓஎல்இடி (2K X1 OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த பேனலானது, டிஸ்பிளேமேட் ஏ+ (DisplayMate A+) சர்டிபிகேஷன் பெற்றுள்ளது. சீனாவில் இந்த சர்டிபிகேஷன் பெற்ற முதல் போனாக ஒன்பிளஸ் 12 மாடல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மெடிக்கல் கிரேடு பிரைட் ஐ புரொடெக்சன் (Bright Eye Protection) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், டிஸ்பிளேவால் கண்களுக்கு ஏற்படும் எந்தவொரு பிரச்சனையும் இந்த போனில் இருக்காது. இவ்வளவு அம்சங்கள் போக ஆட்டோ பிரைட்னஸ், மற்றும் டார்க் கன்ட்ரோல் போன்றவற்றுக்காக பி1 (P1) டிஸ்பிளே சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இந்த போன் உலகின் மிகவும் தரம் வாய்ந்த டிஸ்பிளே கொண்ட போன்கள் பட்டியலில் இருக்கிறது. இதன் மற்ற அம்சங்களும் பின்னிப்பெடல் எடுக்கின்றன.
ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் 120Hz ரெப்ஃரெஷ் ரேட் கொண்ட 6.82 இன்ச் கியூஎச்டி (QHD) டிஸ்பிளே வருகிறது. இதில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2K ரெசொலூஷன் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 மொபைல் (Qualcomm Snapdragon 8 Gen 1 Mobile) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. அதோடு ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) வருகிறது. இந்த போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,400mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் (Wireless Charging Support) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் போனில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதோடு 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டும் வர வாய்ப்புள்ளது. இந்த மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.
இதுவொரு ஹாசல்பிளாட் டியூனிங் (Hasselblad Tuning) மாடலாகும். ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா சோனி எல்ஓய்டி 808 (Sony LYT 808) சென்சாருடன் வருகிறது. அதோடு 48 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்518 (Sony IMX581) சென்சாருடன் வருகிறது. 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Periscope Telephoto) கேமரா இடம்பெற்றுள்ளது.
இந்த கேமராவில் 3x ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 100x டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் மெட்டாலிக் பிரேம் கொண்ட கிளாசிக் பிளாக் (Classic Black), ப்ரிஸ்டின் ஒயிட் (Pristine White) மற்றும் வைப்ரண்ட் கிரீன் (Vibrant Green) ஆகிய 3 கலர்கள் இருக்கின்றன.

இந்த ஒன்பினல் 12 போன் வரும் டிசம்பர் 5ஆம் தேதி சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்தியாவில் ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட இந்த ஒன்பிளஸ் 12 போனின் ஆரம்ப விலை ரூ.65,000 முதல் ரூ.75,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதன் கேமராவுக்கே வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications