Home
Mobile

விஸ்வரூப விலை.. Snapdragon சிப்செட்.. 64எம்பி கேமரா.. வருகிறது புது ஒன்பிளஸ் போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்து ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் விரைவில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போனில் இடம்பெறும் சிப்செட் விவரங்களை வெளியிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதாவது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) உடன் இந்த ஒன்பிளஸ் 12 அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேசமயம் வீடியோ எடிட்டிங், கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

64எம்பி கேமரா.. வருகிறது புது ஒன்பிளஸ் போன்.. எந்த மாடல்?

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் இந்த ஒன்பிளஸ் 12 போன் வெளிவரும் என்பதால் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் 6.82-இன்ச் க்யூஎச்டி பிளஸ் (1440 x 3168 பிக்சல்ஸ்) கர்வ்டு லோ டெம்ப்ரேச்சர் பாலிகிரிஸ்டலின் ஆக்சைடு (LTPO - Low-temperature polycrystalline oxide) டிஸ்பிளேவைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming), 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனில் இன்ஃப்ராரெட் சென்சாரும் (Infrared Sensor) இடம்பெறும். இது டிவிக்கு ரிமோட் கண்ட்ரோலாக (TV Remote Control) பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.

50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் டெலிஃபோட்டோ கேமரா + 64 மெகாபிக்சல் ஓம்னிவிஷன் ஓவி64பி கேமரா (OmniVision OV64B camera)என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா உடன் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த ஒன்பிளஸ் 12 போன் அறிமுகமாகும்.

12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12 போன் விற்பனைக்வரும். மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5400 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஒன்பிளஸ் 12 போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு சில நிமிடங்களில் இந்த பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும்.

இதுதவிர ஒன்பிளஸ் 12 ஆனது யூஎஸ்பி 3.2 போர்ட் (USB 3.2 Port) மற்றும் 50வாட் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு (50W Wireless Charging Support) உடன் வரும் என்று கூறப்படுகிறது.பின்பு வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் 12 போன் அறிமுகமாகும்.

64எம்பி கேமரா.. வருகிறது புது ஒன்பிளஸ் போன்.. எந்த மாடல்?

இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.60,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும். குறிப்பாக இந்தியாவில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் விரைவில் பட்ஜெட் விலையிலும் பல அசத்தலான நோர்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 with Snapdragon 8 Gen 3 chipset will be launched soon: check price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X