Home
Mobile

அண்ணன் வரார் ஒத்து.. OnePlus கிட்ட இருந்து இப்படி ஒரு போன்-ஆ? 5400mAh பேட்டரி.. 6.7-இன்ச் டிஸ்பிளே! என்ன மாடல்

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் எப்போதும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்கிறது.

எனவேதான் ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 12 போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய ஒன்பிளஸ் 12 போன் ஆனது வரும் மாதங்களில் அறிமுகமாகும். ஏற்கனவே ஒன்பிளஸ் 12 போனின் படங்கள் வெளியான நிலையில் தற்போது இந்த போனின் அம்சங்கள் வெளிவந்துள்ளது.

OnePlus கிட்ட இருந்து இப்படி ஒரு போன்-ஆ? என்ன மாடல்?

அதாவது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் 2கே டிஸ்பிளே வளைந்த AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 64எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல அசத்தலான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core Snapdragon 8 Gen 3)சிப்செட் உடன் அட்ரினோ 750 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OxygenOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஆதரவுடன் இந்த போன் இந்தியாவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

OnePlus கிட்ட இருந்து இப்படி ஒரு போன்-ஆ? என்ன மாடல்?

5400 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளுடன் அறிமுகமாகும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.3,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் 12 போன் வரும் நவம்பர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo courtesy: @OnLeaks, smartprix

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 with 64MP telephoto camera will soon be launched : check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X