நாளைக்கு இருக்கு.. 100W சார்ஜிங்.. 5400mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB மெமரி.. மிரட்ட வரும் OnePlus!
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் வட்டாரங்களிலும் ஒன்பிளஸ் 12 மாடலின் பேச்சாகவே இருக்கிறது. அந்தளவுக்கு அந்த போனின் கேமரா, பேட்டரி அம்சங்கள் மிரள வைக்கிறது. முன்னதாக கேமரா அம்சங்கள் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது பேட்டரி அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்த ஒன்பிளஸ் 12 போனில் 100W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வயர்டு சார்ஜிங் மூலம் வெறும் 26 நிமிடங்களில் 0-100 சதவீதம் சார்ஜிங் செய்து கொள்ளலாம். அதேபோல வயர்லெஸ் சார்ஜிங் மூலம் 55 நிமிடங்களில் 0-100 சதவீதம் சார்ஜிங் செய்து கொள்ளலாம்.

இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் காரணமாக பேட்டரி தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க சூப்பர்வூக் எஸ் (SUPERVOOC S) சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்களோடு கனெக்விட்டி அம்சங்களும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), யுஎஸ்பி 3.2 ஜென் 1 (USB 3.2 Gen 1) மற்றும் என்எப்சி (NFC) போன்ற அம்சங்கள் வருகின்றன.
இந்த போனில் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த அம்சங்களும், முன்னதாக வெளியான கேமரா அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட அம்சங்களாகும். இந்த போன் நாளை (டிசம்பர் 5) சீனாவில் வெளியாகிறது. இப்போது, எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் 6.82 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெப்ஃரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டிஸ்பிளேமேட் ஏ+ (DisplayMate A+) சர்டிபிகேஷன் கொண்டிருக்கிறது.

மேலும், மெடிக்கல் கிரேடு பிரைட் ஐ புரொடெக்சன் (Bright Eye Protection) டெக்னாலஜி வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 (Qualcomm Snapdragon 8 Gen 1) சிப்செட் மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) வருகிறது.
இந்த போனில் ஹாசல்பிளாட் டியூனிங் (Hasselblad Tuning) கேமரா வருகிறது. ஆகவே, சோனி எல்ஓய்டி 808 (Sony LYT 808) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்518 (Sony IMX581) சென்சாருடன் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Periscope Telephoto) கேமரா வருகிறது.
32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 100x டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 3x ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் 12 போனில் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த போனில் பேல் கிரீன் (Pale Green), வைட் (White) மற்றும் ராக் பிளாக் (Rock Black) ஆகிய 3 கலர்களில் வர இருக்கின்றன. மெட்டாலிக் ஃப்ரேம் (Metalic Frame) கொண்டிருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 12 போனின் ஆரம்ப விலை ரூ.65,000 முதல் ரூ.75,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த மாதம் சீனாவில் வெளியான பிறகு, ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








