பொளக்குது விற்பனை.. முழுசா ரூ.7000 கட்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 100W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
அமேசான் அதிரும்படியான டிஸ்கவுண்ட்டில் சோனி சென்சார் கேமரா, 120X டிஜிட்டல் ஜூமிங், 8K வீடியோ ரெக்கார்டிங், 3டி கர்வ்ட் குவாட் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன், 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5400mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களையும் கொண்ட ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 Specifications): இந்த போனில் 6.82 இன்ச் (3168 × 1440 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) வருகிறது. இதுவொரு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட், 510 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இந்த ஒன்பிளஸ் 12 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரி வருகிறது. பேட்டரி பேக்கப் மிரளவிடும்படி இருக்கும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) மற்றும் கேமிங் பிரியர்களுக்கு மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் வருகிறது.
இந்த ஒன்பிளஸ் 12 மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 Mobile) சிப்செட் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் செட்டப் வருகிறது. சோனி எல்ஒய்டி 808 சென்சார் மெயின் கேமராவில் உள்ளது.

அதேபோல அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்581 சென்சாரும், டெலிபோட்டோவில் ஓம்னிவிஷன் ஓவி64பி சென்சாரும் வருகிறது. 3X ஆப்டிகல் ஜூமிங், 6X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி, ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம், 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.
சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சாருடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இன்பிராரெட் சென்சார், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் டால்பி அட்மோஸ் வருகிறது. டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. கிளாசியல் ஒயிட், ப்ளோவி எம்ரால்டு மற்றும் சில்கி பிளாக் ஆகிய 3 கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.
இந்த ஒன்பினஸ் 12 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.64,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் முழுதாக ரூ.7000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.57,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








