OnePlus விஸ்வரூபம்.. ரூ.19001 ரேட் கட்ல 100W சார்ஜிங்.. 5400mAh பேட்டரி.. 12GB ரேம்.. SONY கேமரா.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படி ரூ.19,001 கம்மி விலையில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 5400mAh பேட்டரி, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 12 ஜிபி ரேம் போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போன் கிடைக்கிறது. நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக இந்த விலைக்கு கிடைக்கிறது. பிரீமியம் போனை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வாங்க இதைவிட நல்ல நேரம் கிடைக்காது.
ஒன்பிளஸ் 12 அமேசான் விற்பனை (OnePlus 12 Amazon Sale): இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.64,999ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.69,999ஆக இருக்கிறது. ஆனால், 12 ஜிபி ரேம் வேரியண்ட் இப்போது அமேசான் தளத்தில் ரூ.51,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

இது ரூ.13,001 விலை குறைப்பில் கிடைப்பதாகும். இதுபோக ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.6,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,001 கம்மியாக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதேபோல 16 ஜிபி ரேம் மாடலுக்கும் ரூ.6,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் விலை குறைப்பு கிடைக்கிறது. இப்போது, இந்த போனின் பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 Specifications): இந்த பிரீமியம் போன் பழைய மாடலாச்சே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், உண்மையில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமல்லாமல், 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. ஆகவே, லேட்டஸ்ட் மாடல்களுக்கு நிகரான யுஐ கிடைக்கும். அதே நேரத்தில் பீச்சர்கள் பிரீமியமாக இருக்கும்.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், விசி கூலிங் சிஸ்டம், டிரினிட்டி என்ஜின் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

இந்த ஒன்பிளஸ் 12 போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் மற்றும் குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன் கொண்ட 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 808) சென்சார் + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்581) சென்சார் + 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (ஓம்னிவிஷன் ஓவி64பி) சென்சார் கிடைக்கிறது. 8K வீடியோ ரெக்கார்டிங், 120X டிஜிட்டல் ஜூமிங், 3X ஆப்டிகல் ஜூமிங், 6X இன்சென்சார் ஜூமிங் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உள்ளது.
32 எம்பி செல்பீ கேமராவானது சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங்குடன் கிடைக்கிறது. விசி கூலிங் சிஸ்டம் மட்டுமல்லாமல், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரி கிடைக்கிறது. ப்ளோயி எம்ரால்டு, சில்கி பிளாக் மற்றும் கிளாசியர் ஒயிட் ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








