Home
Mobile

ஆரம்பமே அடிச்சு தூக்கும்.. 2024 மிரளப்போகுது.. 24GB ரேம்.. QHD டிஸ்பிளே.. 64MP டெலி.. எந்த போன்?

"எப்பதான் வருமோ" என்று ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் காக்க வைத்த ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போனின் குளோபல் வெளியீட்டு தேதி நெவர் செட்டில் மாநாட்டில் (Never Settle Summit) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருந்த ஒன்பிளஸ் 12 மாடலானது, டிசம்பர் 5ஆம் தேதி சீனாவில் வெளியாகியது. இந்த போனின் பிரம்மாண்ட கேமரா, சிப்செட், பேட்டரி மற்றும் டிஸ்பிளே போன்ற ஒட்டுமொத்த அம்சங்களும் மற்ற நாடுகளில் இருக்கும் ஒன்பிளஸ் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் வைத்துவிட்டது.

2024 மிரளப்போகுது.. 24GB ரேம்.. QHD டிஸ்பிளே.. 64MP டெலி.. எந்த போன்?

இந்தியாவிலும் அந்த போனுக்கான எதிர்பார்ப்பு, இதுவரையில் வெளியான ஒன்பிளஸ் போன்களைவிட அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும், குளோபல் வெளியீட்டுக்கு (Global Launch) பிறகே மற்ற நாடுகளில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் திட்ட வட்டமாக இருக்கிறது.

இதனால், ஒட்டுமொத்த எதிர்பாப்பும் குளோபல் வெளியீட்டு தேதி பக்கம் திரும்பியது. இப்படிப்பட்ட சூழலில் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற நெவர் செட்டில் மாநாட்டில் ஒன்பிளஸ் 12 போனின் குளோபல் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, வரும் ஜனவரி 23ஆம் தேதி அந்த போன் உலகளவில் வெளியாகிறது.

அன்றைய தினத்தில் இந்திய வெளியீட்டு தேதி, அந்த போனின் இந்திய மார்கெட் விலை விவரங்கள் உள்ளிட்ட தகவல்களும் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால், ஒன்பிளஸ் பிரியர்கள் படுகுஷியில் இருக்கின்றனர். இவ்வளவு பெரிய வரவேற்புக்கு மத்தியில் அந்த ஒன்பிளஸ் 12 போனில் அப்படியென்ன இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்வோம்.

2024 மிரளப்போகுது.. 24GB ரேம்.. QHD டிஸ்பிளே.. 64MP டெலி.. எந்த போன்?

இந்த போனில் 6.82 இன்ச் கியூஎச்டிபிளஸ் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மொபைல் சிப்செட் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், கலர்ஓஎஸ் 14 மற்றும் அட்ரினோ 750 ஜிபியு கிராபிக்ஸ் சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்கள் வருகின்றன. டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது.

இந்த ஒன்பிளஸ் 12 போனில் சோனி எல்ஓய்டி 808 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்518 சென்சாருடன் 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + ஓம்னிவிஷன் ஓவி64பி சென்சாருடன் 64 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஒஐஎஸ், 120X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது.

சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5400mAh பேட்டரி 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. அதோடு 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. சீனாவில் இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 50,650ஆக இருக்கிறது.

2024 மிரளப்போகுது.. 24GB ரேம்.. QHD டிஸ்பிளே.. 64MP டெலி.. எந்த போன்?

அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.56,465ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.62,440 ஆகவும் இருக்கிறது. 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.68,335 ஆக இருக்கிறது. இதே விலையில் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 With 24GB RAM, 5400mAh Battery Global Launch on January 23 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X