Home
Mobile

மளமளவென இறங்கிய OnePlus 5ஜி போன் விலை.. 100W சார்ஜிங்.. சோனி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போனின் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 12 போன் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.64,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் தளத்தில் இந்த போனுக்கு ரூ.5,499 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை தற்போது ரூ.59,500 விலையில் வாங்கிவிட முடியும்.

மளமளவென இறங்கிய OnePlus 5ஜி போன் விலை.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 Specifications): மிகவும் தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 Mobile) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 4 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் (Android Update) மற்றும் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் (Security Update) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 6.82 இன்ச் குவாட் எச்டிபிளஸ் ( (Quad HD+) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது ஒன்பிளஸ் 12 போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3168 × 1440 பிக்சல்ஸ், 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

50 எம்பி சோனி எல்ஒய்டி 808 (Sony LYT-808) சென்சார் கொண்ட மெயின் கேமரா + 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்581 (Sony IMX581) சென்சார் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 64எம்பி ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சார் கொண்ட பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 போன்.

அதேபோல் இந்த ரியர் கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங், 6X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. மேலும் இந்த ஹசல்பிளாட் கேமரா சிஸ்டமானது (Hasselblad Camera System) 4ஆவது ஜெனரேஷன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 8K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். எனவே துல்லியமான வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

மளமளவென இறங்கிய OnePlus 5ஜி போன் விலை.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) கேமரா கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 போன். பின்பு இந்த செல்பி கேமரா உதவியுடன் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். குறிப்பாக சிறந்த கேமரா போன் வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த ஒன்பிளஸ் 12 போனை நம்பி வாங்கலாம்.

5400mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளன. இதுதவிர பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

Best Mobiles in India

English summary
OnePlus 12 with 12GB RAM price slashed on Amazon: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X